­
10/27/16 - !...Payanam...!

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இ...

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரமாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா. மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, ப்ரீயட் கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார், 420 வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார். அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது, பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வையுங்கள் என சொல்கிறார்....

Read More

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம...

<
"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். அதற்கு நாம் சொல்லும் காரணங்கள் "நம்ம வேலை கெட்டுடும்" "இவங்க கொடுக்குற சம்பளத்துக்கு இத வேற செய்யணுமா?" "நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும். இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம்...

Read More

“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு...

<
“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நாள்தோறும் முரசொலிக்கு கடிதம் எழுதியும், அறிக்கைகள் கொடுத்தும் வந்த கருணாநிதிக்கு என்ன தான் ஆச்சு? என்று தி.மு.க வினர் வருத்ததோடு விசாரித்து வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலை குறித்த நாம் விசாரித்த போது “ கடந்த பத்து தினங்களுக்கு முன்பில் இருந்தே அவர் கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தார். அதனால் தான், உடல்நிலையை காரணம் காட்டி முரசொலியில் என்னால் இப்போது கடிதம் எழுத முடியாது என்பதையும் தெரிவித்தார். காய்ச்சல் இருந்தது, அதற்காக மாத்திரைகள் எடுத்து கொண்டார். ஆனாலும் காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. அவருக்குச் சிகிச்சை அளிக்க அவருடைய குடும்ப மருத்துவர் கோபால் தினமும் காலையும், மாலையும் வீட்டுக்கு வந்து செல்கிறார். சில தினங்களுக்கு...

Read More

சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் ...

<
சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தார்கள் . அதற்காக அந்தப் பள்ளி நிர்வாகம் 38 மாணவர்களையும் டிசி வாங்கிச் செல்லுமாறு மிரட்டியதாகத் தகவல் வெளியானது. அது தொடர்பான வீடியோ வாட்ஸ்ப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைதளங்களின் வழியே வைரலானது. டி.சி-யை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் ! இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம்."தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களிடம், '14 -ம் தேதி யாரும் பள்ளிக்கு வரவேண்டாம். உங்களுடைய டி.சி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 -ம் தேதி மாணவர்களைத் தயக்கத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பெற்றோர்கள். மாணவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரை நாள் முழுவதும் வகுப்பறைக்கு...

Read More

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. அதே நேரம் தனுஷின் திடீர் பயணம் ஏன் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் பலமாக உள்ளது. தனுஷ் பயணம் ஒரு ரவுண்ட் அப் கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லை என விநிநோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் “கொடி”க்கு சிக்கல் உண்டாகியுள்ளது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப்படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார். கடந்த மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளார். குறிப்பாக சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் செம ஹேப்பியாக உள்ளாராம் தனுஷ். தமிழகம் முழுவதும்...

Read More

ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் ...

<
ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் அரோகரா. பாப்கார்ன், கூல் டிரிங்க்ஸ் அடிஷனல் என்றால் முழு மாச சம்பளமும் முடிஞ்சது! இந்த லட்சணத்தில் தியேட்டர் கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு முழு அனுமதி கொடுத்துவிட்டது கோர்ட். திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தியேட்டர் கட்டண விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தியேட்டர் பராமரிப்பு தொகை, கரண்ட் பில், தொழிலாளர் கூலி, இவற்றையெல்லாம் கணக்கிட்டு கட்டணத்தை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்த நீதிமன்றம், தியேட்டர் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்து கொள்ள தியேட்டர் அதிபர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இனி? சினிமா? அதன் கதி? டமிள் ராக்கர்ஸ் டாட் காம்தான் ஒரே தீர்வு என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது மக்கள்...

Read More

Search This Blog

Blog Archive

About