September 06, 2018
விஸ்வாசம் விலை என்ன? லபக்கென அமுக்கிய அறம் தயாரிப்பாளர்!
September 06, 2018<
ஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா! தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்டரில் குறுக்கும் நெடுக்கும் திரியும் எலிகளுக்கு கூட செம தீனி கிடைக்கும். கேண்டீனில் துவங்கி, பைக் டோக்கன் வரைக்கும் பரபரக்கும். அதற்காகவே காத்திருக்கும் தியேட்டர் வளாகத்திற்கு இது போன்ற தித்திப்பான செய்தி எப்போதெல்லாம் வரும்?ரஜினி, கமல், அஜீத், விஜய்யில் துவங்கி, அதற்கப்புறம் ஒரு அஞ்சாறு நடிகர்கள் வரைக்கும்தான் இந்த கோலாகலம். அப்படியிருக்க… ஒரு புதிய கோலாகலத்திற்கு ஸ்கிரீன் ஓப்பன் பண்ணியிருக்கிறார் அறம் தயாரிப்பாளர் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை சுமார் 47 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல… க்யூப் விளம்பரம் உள்ளிட்ட இதர செலவான 3 கோடியையும் சேர்த்தால் படத்தின் விலை 50 கோடி!விவேகம் படத்தின் நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் முணுமுணுத்து வரும் வேளையில் எப்படி தைரியமாக இப்படியொரு வியாபாரம் நடந்து முடிந்தது? அங்குதான் சாம பேத தான...