October 31, 2016
<
கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான். அவருதான் பைரவா ஷுட்டிங்ல இருக்காரே… அதைவிட வேறென்ன பண்ணப் போறார்? இப்படிதானே பதில் வரும்? ஆனால் கோடம்பாக்கத்தின் குறுகுறு கவனிப்புக்கு பின் வரும் பதில், அது இல்லீங் மக்கா! சென்னையில் ஆக்டிவாக இருக்கும் அவரது மன்றப் பொறுப்பாளர் ஒருவரும், விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ ஒருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆக்டிவாக இருந்து தற்போது அதிருப்தியாக இருக்கும் சில தேமுதிக நிர்வாகிகளுக்கு போன் அடிக்கிறார்களாம். “நம்ம இயக்கத்துக்கு வந்திருங்க. உங்களுக்கு பிரைட்டான எதிர்காலத்தை ஏற்படுத்தி தர்றோம்” என்கிறதாம் இந்த போன் உரையாடல். இதையெல்லாம் விஜய் செய்யச் சொன்னாரா? அல்லது இவர்களாகவே ஆர்வ மிகுதியால் இப்படி செய்கிறார்களா தெரியாது. ஆனால் இவர்கள் அடித்த பந்து சரியாக கோல் போட்டிருக்கிறதாம். சிலர், நாங்க ரெடி…எப்போ எப்போ என்று கேட்டு வருவதாகவும் தகவல். ஒரு காலத்தில்...
October 31, 2016
“சேர்க்கிறதுக்கு பேரு கூட்டம் இல்ல; சேர்றதுக்கு பேர் தான் கூட்டம் ” - கொடி
October 31, 2016தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்! கருணாஸூக்கு பிறக்கும் இரட்டை ...
<
தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்! கருணாஸூக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் மூத்தவர் தனுஷ் கொடி, இளையவர் தனுஷ் அன்பு. அண்ணன் கொடி பெயருக்கு ஏற்ற மாதிரியே எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருக்கும் கட்சியில் சேர்ந்து, அதே கட்சியில் தொண்டனாக இருந்து உயிரை விட்ட தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மெல்ல மெல்ல முன்னேறி கட்சியில் இளைஞர் அணி தலைவர் ஆகிறார். இவருக்கும் ஆளும் கட்சியில் மேடைப் பேச்சாளராக இருக்கும் த்ரிஷாவுக்கும் லவ். இளையவரான அன்பு ஒரு கல்லூரியில் புரொபஸராக வேலை செய்கிறார். இவருக்கும் பிராய்லர் கோழி முட்டைகளை கலர் மாற்றி நாட்டுக்கோழி முட்டை என்று சொல்லி விற்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் லவ். பாதரசக் கழிவுகளால் ஊர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூடப்பட்டிருந்த ஒரு தொழிற்சாலை பற்றிய ஆதாரங்கள் தம்பி தனுஷ் மூலம் அரசியல்வாதி அண்ணன் தனுஷுன் கைக்கு...
October 31, 2016
கொடி, காஷ்மோரா வசூல் மழை- 3 நாள் பிரமாண்ட கலேக்ஷன் ரிப்போர்ட்
October 31, 2016தீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்களை ஓரளவு திருப்தி பட...
தீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்களை ஓரளவு திருப்தி படுத்தியுள்ளது. கொடி 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதேபோல் காஷ்மோராவும் தமிழகத்தில் ரூ 20 கோடி, ஆந்திரா தெலுங்கானாவில் ரூ 13 கோடி உலகம் முழுவதும் ரூ 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். வரும் வாரங்களில் பெரிய படங்கள் ஏதும் இல்லாததால் இந்த இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என தெரிகின்றது. ...
October 31, 2016
’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' - நெகிழும் ரஜினி
October 31, 2016நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவரு...
நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயில்’. அவருடன் பழகியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த கணத்தில் நான் மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரம். மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்கள் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் ‘இந்த பழக்கங்களை எல்லாம் விட்டுவிடு ரஜினி, நீ பெரிய நடிகனாக வருவே, இந்த கெட்டப் பழக்கங்களால உன்னோட உடம்பை கெடுத்துக்காத’...
October 31, 2016
எம்.ஜி.ஆரிடம் மறைக்கப்பட்ட இந்திரா காந்தியின் மரணச் செய்தி!
October 31, 20161984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவின் உறுதிமிக்க பெண்ம...
1984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவின் உறுதிமிக்க பெண்மணியான இந்திரா தமிழகத்துடன் மிக நேருங்கிய தொடர்பு கொண்டவர். அவற்றில் சில இங்கே.... இந்தியாவின் மக்கள் ஆதரவு பெற்ற பிரதமர் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1966 ல் ரஷிய தலைநகரில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்ற லால்பகதுார் சாஸ்திரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போது அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர், இந்திராவை இந்தியாவின் அடுத்த பிரதமராக முன்னிறுத்தினார். மத்திய செய்தி ஒலிபரப்பு மந்திரியாக இருந்த இந்திராவை மொரார்ஜிதேசாய் என்ற கட்சியின் மிக மூத்தவரும் சக்தி மிக்க அரசியல்வாதியையும் மீறி தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்தியாவின் பிரதமராக்கி அவரை தலைவராக அங்கீகரிக்கச் செய்தவர் தமிழரான காமராஜர்தான். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மிகவும் பிடித்த உடை சேலை. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுச்சேலை. காஞ்சிப்பட்டின் டிசைன்களுக்கு...
October 31, 2016
ஜெ. எப்போது வீடு திரும்புகிறார் ? மீண்டும் சுறுசுறுப்படைந்த அப்போலோ !
October 31, 2016தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் ...
<
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை சற்று குறைவாகக் காணப்பட்டாலும், தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் இன்று வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 நாட்கள் தாண்டிய நிலையிலும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சார்பில் இதுவரை 11 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நுரையீரல் நோய்த் தொற்று, இதயநோய் சிகிச்சை, பிஸியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து வந்த நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே, சிங்கப்பூர் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஜெயலலிதா, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையிலும் தவறாமல் தெரிவிக்கின்றனர். அப்போலோ...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
October
(156)
-
▼
Oct 31
(6)
- தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜய் மன்றம் போன்! அம்மா ப...
- “சேர்க்கிறதுக்கு பேரு கூட்டம் இல்ல; சேர்றதுக்கு பே...
- கொடி, காஷ்மோரா வசூல் மழை- 3 நாள் பிரமாண்ட கலேக்ஷன...
- ’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' -...
- எம்.ஜி.ஆரிடம் மறைக்கப்பட்ட இந்திரா காந்தியின் மரணச...
- ஜெ. எப்போது வீடு திரும்புகிறார் ? மீண்டும் சுறுசுற...
-
▼
Oct 31
(6)
-
▼
October
(156)