ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!
November 13, 2017வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ...
கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.
பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.
முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
தள்ளிப்போகும் 24-ம் புலிகேசி: வடிவேலு காரணமா?
November 13, 2017நடிகர் வடிவேலு கடந்த 2006-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு ஹீரோ என்ற தனி...
முதல் கட்டமாக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கியது. ஆனால், தொடங்கிய 8 நாட்களிலேயே காஸ்ட்யூம் விவகாரத்தால் படவேலைகள் நிற்கின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:
வடிவேலுவின் போட்டோஷூட்டுக்காக பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மீது படக்குழுவினருக்கு திருப்தி இல்லை. அதனால், அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வடிவேலுவும் இதற்கு ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கியது. ஒரு வாரம் ஆன நிலையில், ‘அதே காஸ்டியூமரை நியமித்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன்’ என்று வடிவேலு கூறியுள்ளார். தற்போது இதுகுறித்து இரு தரப்புக்கும் பேச்சு நடக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். வடிவேலு தரப்பில் விசாரித்தபோது, ‘விரைவில் பேசுவோம். தற்போது எதுவும் சொல்வதற்கில்லை’’ என்றனர்.
அக்டோபர் புரட்சியை முறியடித்த நவம்பர் சோதனை!
November 13, 2017சசிகலா குடும்பத்தினர்மீது நடத்தப் பட்ட சர்ஜிக்கல் ரெய்டுக்கு அக்டோபர் புரட்சிதான் விதை! * ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்கு பின் நீட...
* ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்கு பின் நீடிக்காது’’ - அக்டோபர் 15-ம் தேதி திருச்சி.
* ‘‘பொங்கலுக்குள் பழனிசாமி ஆட்சி கவிழ்ந்து விடும்’’ - அக்டோபர் 28-ம் தேதி மதுரை.
இந்த இரண்டு பேட்டிகளும் அக்டோபரில் தினகரன் அளித்தவை.
இந்தப் பேட்டிகள், மூன்றாவது நான்காவது பக்கங்களில் சாதாரணமாகத் தான் பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதற்கான மூவ் தினகரனால் தொடங்கப்பட்டிருந்தது. அதற்குள் போவதற்கு முன்பு, பேட்டியில் என்ன சொல்லியிருந்தார் என்பதைப் படித்துவிடுவோம்.
‘‘எடப்பாடி ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. டெங்குவைவிட கொடிய விஷம் பழனிசாமியின் அரசு. டெங்கு ஒழிக்கப்படுவதுபோல பழனிசாமியின் அரசும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இரட்டை இலை எங்களுடைய சொத்து. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எடப்பாடியின் அரசு, டிசம்பர் மாதத்தைத் தாண்டாது. எப்படியும் டிசம்பரில் சட்டப்பேரவையை நடத்தியாக வேண்டும். ஓட்டெடுப்பு நடத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயகக் கடமையை நாங்கள் செய்வோம்’’ எனப் பேட்டியில் விரிவாக சொல்லியிருந்தார் தினகரன்.
‘‘எடப்பாடியை முதல்வராக ஏற்க முடியாது’’ எனச் சொல்லி, பொறுப்பு கவர்னர் வித்தியாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கடிதங்கள் வழங்கினார்கள். ஆனால், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆனால், எடப்பாடி அரசு வேறு நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது. 18 பேர்களையும் வளைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜக்கையனை மட்டுமே இழுக்க முடிந்தது. குடகுவில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு
எம்.எல்.ஏ-க்கள்மீது சாம தான பேத தண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை. செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர்மீது வழக்குகள் போட்டும் பலன் இல்லை. சட்டசபையைக் கூட்டவைத்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வேறுவழியில்லாமல்தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார்கள். இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
‘அரசுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தால், எடப்பாடி ஆட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ்உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வதில், சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்’ எனச் சொல்லி அடுத்த வழக்குப் பாய்ந்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் சரியென்றால், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தால், அந்த 18 பேரும் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆட்சியைக் கவிழ்க்க முற்படலாம். இந்தக் கணக்கை வைத்துதான், ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்குப்பின் நீடிக்காது’’ என தினகரன் சொன்னார்.
அதே நேரம், இன்னும் சில எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சிகளையும் தினகரன் எடுத்துக் கொண்டிருந்தார். எப்படி பார்த்தாலும் எடப்பாடி தலைக்குமேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசுதான் இதில் உதவ முடியும் என்பதால், ‘சோதனை’ நடத்தப்பட்டிருக்கிறது.
வருமானவரி ரெய்டால் என்ன விளையும்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டால், அவர்கள் தினகரனுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியைக் கவிழ்க்கக்கூடாது என்பதற்கு இந்த மெகா ரெய்டைப் பார்த்து கொஞ்சம் பதுங்கலாம். அல்லது, எடப்பாடி அணியில் வந்து சேரலாம். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், தினகரன் பக்கம் தாவ நினைத்தால், ‘ரெய்டு நடக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தினகரன் இழுக்கும்போது கரன்சிகள் கைமாறுமே. அதற்கும் செக் வைக்கவும், இந்த ரெய்டு பயன்பட்டிருக்கும்.
தினகரனின் அக்டோபர் புரட்சியின் இன்னொரு விஷயம், இரட்டை இலை விவகாரம். தேர்தல் கமிஷனில் நடந்துவரும் வழக்கின் இறுதி விசாரணை முடிக்கப்பட்ட அடுத்த நாள்தான், ரெய்டு ஆப்ரேஷன் நடத்தப்பட்டிருக்கிறது. இரட்டை இலை தங்களுக்குக் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால், எடப்பாடி அணிக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தினகரன். விசாரணையின்போது, தினகரன் அணி வைத்த வாதங்களே அதற்குச் சாட்சி. ஆட்சிக்கு ஆபத்து, இரட்டை இலை முடக்கம் என முன்னேறும் தினகரனை இதற்கு மேலும் விட்டுவைக்க முடியாது என முடிவெடுத்து நடத்தப்பட்டிருக்கிறது சோதனை.
டிசம்பரில் ஆட்சிமீதான அட்டாக்குக்காக அக்டோபரில் தினகரன் போட்ட புரட்சி விதையை, நவம்பர் ரெய்டு மூலம் முறியடித்திருக்கிறார்கள்.
‘’ரஜினி சார் சொன்ன தத்துவம் என் வாழ்க்கையில நடந்திருச்சு..!’’ - 'தீரன்' கார்த்தி
November 13, 2017செம ஃபிரஷாக... கெத்தாக இருக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக மிடுக் போலீஸாக மாறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வே...
“சில ஹீரோக்கள் ஒரே சமயத்துல ரெண்டு, மூணு படங்கள் நடிக்கும்போது... நீங்க மட்டும் ஏன் ஒவ்வொரு படமும் ரொம்ப செலக்டிவ்வா, டைம் எடுத்துப் பண்ணுறீங்க. அதுக்குக் காரணம் என்ன?”
“அவங்களுக்கெல்லாம் கதை கிடைக்குதுங்க. எனக்குக் கிடைக்கலை அவ்வளவுதான். மத்தவங்களை நான் பிரதிபலிக்க முடியாது. எனக்கு என்ன வருமோ அதைத்தான் நான் ஸ்க்ரீன்ல காமிக்க முடியும். அப்படிங்கறப்போ அதுக்கு நான் டைம் எடுத்துக்க வேண்டியிருக்கு. அழுத்தமான கதைகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கு. அதுதான்.”
“உங்களுக்கு மெனக்கெட்டு நடிக்கறது ரொம்ப பிடிச்சுருக்கே ஏன்?”
“சினிமாவுக்குத் தேவைனா என்ன வேணாலும் பண்ணலாம். அது எனக்கு பேஷனாக இருப்பதால் அதை நான் அர்ப்பணிப்போட செய்யறேன். நான் எப்பவும் கதாபாத்திரமா மட்டுமே இருக்கேன். இயக்குநர் எல்லாவுமா இருக்கார். அதுக்கான ஃபுல் எபர்ட் நான் கொடுக்கணும்ல. அதுதான் மெனக்கெட்டு, இஷ்டப்பட்டு நடிக்கிறேன்."
“பத்துவருஷத்தில் ஒரு சக்ஸஸ் புல் ஹீரோ, நடிகர் சங்க பொருளாளர்னு படபடனு வளர்ந்து வந்துட்டீங்களே... இதை எல்லாம் கொஞ்சம் நிதானமா திரும்பிப்பார்த்தா எப்படி ஃபீல் ஆகுது?”
”கனவு மாதிரிதான் இருக்கு. இங்க சக்ஸஸ் ரேஷியோங்கறது ஒன் பர்சன்ட்தான். 'யாருக்கு யாரைப் பிடிக்கும்னு சொல்லமுடியாது. பிடிச்சுடுச்சுனா அப்புறம் அவங்களுக்கு லக்தான்'னு ரஜினி சார் சொல்வார். அப்படி ஒரு ஆசிர்வாதம் எனக்குக் கிடைச்சுருக்கு. இன்னொன்னு, நம்மகிட்ட மக்களுக்கு என்ன பிடிச்சுருக்கு அப்படிங்கறதையும் நான் புரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நான் சில படங்களில் தடுமாறி ஃபெயிலியர் ஆகியிருக்கேன். ஃபெயிலியர் இல்லாத லைஃப்பே இல்லைங்கறதையும் அக்செப்ட் பண்ணிக்கிட்டுதான் ஆகணும். நாம பண்ற விஷயம் நமக்குப் பிடிச்சுருக்கணும். இது எல்லாருடைய கெரியருக்குமே பொருந்தும். இப்போ ஒரு நிதானமும், தைரியமும் கிடைச்சுருக்கு.”
"காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் எல்லாக் கதைகளுக்குமே பொருந்தக் கூடிய ஹீரோவாக இருக்கீங்க. இதுக்கு எப்படித் தயார் பண்ணிக்கிறீங்க?"
“எல்லாம் ஆசீர்வாதம்தாங்க. அதுக்காக இது கால்குலேட்டட் கிடையாது. 'பருத்தி வீரன்' பட கேரக்டர்ல எல்லா ஷேட்ஸுமே இருந்தது. அப்பவே படபடனு எல்லா சீன்ஸும் நடிக்க வேண்டிருந்தது. அப்ப கத்துகிட்டதுதான். அதுக்கு அமீர் சார்தான் காரணம். அவருக்குதான் நான் இதுக்கு நன்றி சொல்லணும்."
“போலீஸ் கேரக்டருக்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எல்லாம் எடுத்துக்க வேண்டியிருந்துருக்குமே?”
“ஆரம்பத்தில் எங்க எல்லாருக்குமே சல்யூட் முதற்கொண்டு பயிற்சி கொடுத்தாங்க. என்கிட்ட எப்படி பேசணும், நான் எப்படி நடந்துக்கணும்னு நிறைய பயிற்சி. காவல்துறை அதிகாரிகளிடமே நேரடியா கத்துக்கிட்டோம். அங்க உண்மையிலேயே டி.எஸ்.பியா பயிற்சியில் இருந்தவங்க, 'சார் நீங்க இவ்ளோ ஈசியா யூனிஃபார்ம் போட்டுட்டீங்க'னு கிண்டல் செஞ்சாங்க. 'ஏங்க... நான் போட்டுட்டு திருப்பிக் கொடுத்துவேன். உங்களுக்கு அப்படி இல்லையே’னு சொன்னேன். அந்த அனுபவம் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. அங்க ஒருத்தர், ’சூர்யா அண்ணாவோட ‘காக்க காக்க’ அன்புச்செல்வன் பார்த்துதான் நான் போலீஸ் ஆகவே நினைச்சேன்'னு சொன்னார். இப்படி எவ்வளவோ நிகழ்வுகள் அந்த ட்ரெய்னிங் ப்ரீயட்ல கிடைச்சது."
“இந்தப் படம் ஒரு உண்மையான காவல்துறை அதிகாரியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுனு சொன்னாங்க. யாரின் கதை? எந்த உண்மைச் சம்பவம்னு சொல்ல முடியுமா?"
“ரொம்ப வருஷமா யாரு குற்றம் பண்றாங்க என்பதே தெரியாம இருந்த கேஸ்ஸை எப்படிக் கண்டுபிடிச்சு முடிக்கறாங்க என்பதுதான் படம். பீரியட் ப்லிம்தான். செல்போன்லாமே 2000க்கு மேலதான் வந்துச்சு. அப்படிப்பட்ட நிலையில் டேட்டா கனெக்ஷன் இல்லாம ஒருத்தரைத் தொடர்பு கொள்றதில் இருக்கற சிக்கல்கள், சவால்கள் எல்லாம் தாண்டி எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க என்பது உண்மைக்கு நெருக்கமா சொல்லப்பட்டுருக்கு."
"ஸ்கிரிப்ட் ஏதாவது எழுதிட்டு இருக்கீங்களா?"
“இல்லைங்க. அதுக்கு நிறைய படிக்கணுமே... ஆரம்பத்துல எழுத்தாளர் ஜெயகாந்தன், சுஜாதானு நிறைய படிச்சுட்டிருந்தேன். இப்பப் படிக்க நேரம் கிடைக்கலை. சீக்கிரம் நிறைய படிக்கணும். படிச்சுட்டே இருந்தாதான் நல்ல ஸ்கிரிப்ட் எழுத முடியும். ஆனா, நடிப்பதற்கு கதை கேட்கும்போது ஸ்க்ரிப்ட்ல இருக்கற விஷயம் என்னவா வரும்னு யோசிக்க முடியுது. கதையா சொல்றப்போ நிறைய விஷயங்கள் விடுபடலாம். ஆனால், ஸ்கிரிப்ட்டா படிக்கும்போது அதைப் புரிஞ்சுக்க முடியும். அதுக்கு என்னோட இயக்குநர் மூளை யூஸ் ஆகுது."
இளநரையை போக்க வழிகள்...?
November 13, 2017இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்...
இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.
முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.
ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.
ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
• நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
• வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
• விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.
• தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
சிறுநீரகக்கல் !- ஏன் வருகிறது? எப்படி அறிந்து கொள்வது? என்ன செய்வது?
November 13, 2017இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல். இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடன...
இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே மருத்துவரைப் பார்த்துடுங்க…
1.பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
2.குமட்டல், வாந்தி
3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
4.சிறுநீர் அளவு அதிகரித்தல்
5. சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
6. அடிவயிற்றில் வலி
7. வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
8. இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
9. ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
10. சிறுநீரின் நிறம் இயறகைக்கு மாறாக காணப்படுதல்
நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.
கல் வர காரணங்கள்
சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரை களாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பாதிப்பு யாருக்கு?
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.அறிகுறிகள்: சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சிறுநீரில் இரத்தம் :
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி? அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை :
பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
சாறு வகைகள் :
சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
பழங்கள் :
ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.
உப்பைக் குறைக்கவும்! :
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்கு தினமும் 2.5 கிராம் உப்பு போதும். சமையல் உப்பு என்பது வேதிப் பண்பின்படி சோடியம் குளோரைடு. சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
காரம் புளி :
உணவில் காரம், புளி, மசாலாவைக்கு றைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிர்க்கவும். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது.
ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான், இந்த எச்சரிக்கை!
பார்லி :
பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.
“ ‘அறம்’ படத்தில் நடப்பது நிஜத்தில் சாத்தியமா?” - அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
November 13, 2017இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் `அறம்' திரைப்படம், பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ....
உண்மைத்தன்மை என்ன? `அறம்' - யதார்த்தமா... மிகையான கற்பனையா என்பதை அறிந்துகொள்ள, இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம்.
“வெளிப்படையா பேட்டிகொடுக்க, அரசாங்கத்திடம் ரிப்போர்ட் கொடுக்கணும்” என்று கூறி பெயர் குறிப்பிடாமல் பேட்டிகொடுக்க ஒப்புக்கொண்ட அவர், “அரசாங்கத்தோட பாலிசிகளை நடைமுறைப்படுத்தும் கருவிதான் நாங்க. எங்களுக்கு இருக்கும் வரம்புக்குள்ள மக்களுக்கு சேவை செய்றதுக்கும் வாய்ப்புகள் உண்டு. `அறம்' திரைப்படத்துல வர்ற மாதிரி தண்ணீர் திருடிட்டு போற லாரியைப் பறிமுதல் பண்ணி, தேவையான மக்களுக்கு ஏதாவது ஒருமுறையில விநியோகம் பண்ணலாம்தான். ஆனா, எழுத்துபூர்வமா அரசுக்கு எழுதி, அரசின் ஒத்துழைப்போடுதான் அதைத் தொடர்ந்து செய்ய முடியும்.”
அரசியல்வாதிகள் தலையீடு பற்றிக் கேட்டபோது, “தலையீடுகளெல்லாம் பொருட்படுத்தாம தன்னோட கடமையை நேர்மையா செஞ்சா டிரான்ஸ்ஃபர் வேணும்னா கிடைக்கலாம். அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் சஸ்பெண்ட் பண்ண மாட்டாங்க. சஸ்பென்ஷன் என்பது அரிதிலும் அரிது.''
“நீங்கள் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளை (எடுத்துக்காட்டாக, தண்ணீர் தொடர்பான அரசின் கொள்கைகள்) மக்கள் ஒப்புக்கிறாங்களான்னு பார்த்து நடந்துக்கிறதும் நேர்மையான அம்சம்தானே?''
“இருக்கலாம். மக்கள்கிட்ட எதிர்ப்பு இருந்தா அரசுக்குத் தெரிவிக்கணும், அவ்ளோதான். மற்றபடி கொள்கையை மாத்துறது எல்லாம் எங்க வரம்புக்குள் இல்லை” என்று வரம்புக்குள் சிரிக்கிறார்.
மாணவர் ஃப்ரெடெரிக் ஏங்கல்ஸ்லட்சியத்துடன் அரசுத் துறைக்குள் நுழைந்து தன்னுடைய வரம்பை விரைவாகப் புரிந்துகொண்டதாகச் சொல்லும் இவருக்கும், ஆட்சிப்பணித் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணவருக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ள, தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படிக்கும் ஃப்ரெடெரிக் ஏங்கல்ஸ் என்கிற மாணவரைச் சந்தித்தோம்...
“ ‘அறம்' மாதிரியான படங்களைப் பார்த்துதான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசையே வந்துச்சு. அதுமட்டுமல்லாம, சைலேந்திரபாபு மாதிரியான ஆபீஸர்ஸைப் பற்றிப் படிக்கிறப்போ, அதிகாரத்துக்குள்ள போனா பெரிய மாற்றமில்லைன்னாலும், ஒரு சின்ன மாற்றமாவது பண்ண முடியும்னுதான் நான் ஐ.ஏ.எஸ்-க்குப் படிக்கிறேன்” என்கிறார்.
“படத்துல நயன்தாரா ராஜினாமா பண்ணிடுறாரே!”
“இந்த அமைப்புக்குள்ள சிறு மாற்றங்களைச் செய்ய முடியும் என நம்புறேன். முடிஞ்ச அளவுக்கு மோதிப்பாப்போம்” என்கிறார்.
ஒருபக்கம் குறுகிய காலத்துக்குள்ளாகவே வரம்புகளைப் புரிந்துகொண்ட இளம் அதிகாரி, மறுபக்கம் லட்சியக்கனவோடு தீவிரமாகப் படிக்கும் ஐ.ஏ.எஸ் ஆஸ்பிரன்ட். இவர்கள் இருவருக்கும் வருங்காலத்தில் எப்படியான அனுபவங்கள் காத்திருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள, கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்-ஸைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோட வரம்பு என்ன. அவங்களால சுதந்திரமா செயல்பட முடியுமா?''
“சுதந்திரமாகவெல்லாம் செயல்பட முடியாதுங்க. அதுமட்டுமில்லை, எனக்குத் தெரிஞ்சு சுதந்திரமா செயல்பட முடியலைன்னு அன்றும் சரி, இன்றும் சரி யாரும் வேலையைவிட்டுப் போனதைப் பார்க்கலை. பெரும்பாலானவங்களுக்கு இது ஜாப் செக்யூரிட்டி இருக்கிற அரசுவேலை, அவ்ளோதான். அதை அவங்க இழக்க மாட்டாங்க. ஏதாவது சிக்கல்ல சிக்கிட்டு மீள முடியாமப்போயிருப்பாங்களே தவிர, வெளியிலிருந்து பார்க்கிறவங்க ஊதிப் பெருக்குற மாதிரிலாம் இல்லை.
கலெக்டர் பதவியேயானாலும், அவங்க அரசின் ப்யூன்கள், அவ்வளவுதான். இப்ப திருநெல்வேலியில், அந்தக் கந்துவட்டிக்கு எதிரா கார்ட்டூன் போட்டதுக்கு எஃப்.ஐ.ஆர்-லாம் ஃபைல் பண்ணாங்களே! நல்ல விஷயம். கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரா நடவடிக்கை எடுக்க முடிஞ்சுதா? எல்லோரும் சகாயத்தைப் பற்றிச் சொல்வாங்க. அவரால் பி.ஆர்.பி விஷயத்துல அறிக்கைதான் கொடுக்க முடிஞ்சது. அதுக்குமேல ஒண்ணும் செய்ய முடியாது. அவர் நேர்மையா இருக்கார் அவ்ளோதான். சில தனிநபர்களோட நேர்மையை மட்டும் வெச்சிக்கிட்டு மக்களுக்கு நல்லது செஞ்சிட முடியாது.”
“அதிகாரிகள் நினைச்சாலும் நல்லது செய்ய முடியாதுன்னு சொல்றீங்களா?''
“விதிவிலக்குகள் அங்கொண்ணு இங்கொண்ணுனு இருக்கலாம். ஏன், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல கலெக்டருங்கதான் எஸ்.சி மக்களுக்கு நிலம் இல்லைனு பஞ்சமி நிலத்தைக் கொடுத்தாங்க. இன்னிக்கு அப்படில்லாம் ஒரு கலெக்டர் முடிவெடுக்க முடியாது.''
“படிச்ச அதிகாரிகள், படிக்காத அரசியல்வாதிகளைவிட மக்களுக்கு கூடுதலா நல்லது செய்யலாம்கிற கருத்து தப்புன்னு சொல்றீங்களா?''
“நல்லது செய்யுறதுக்கும் படிப்பறிவுக்கும் நேரடியா சம்பந்தம் இல்லைன்னு சொல்றேன். அறிவுங்கிறது சமூகத்துக்குப் பயன்படணும். படிக்கிறது மட்டும் அறிவு கிடையாது. இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவுல ஒரு நல்ல திட்டத்தை இந்த அதிகாரிகள் டிசைன் பண்ணிருப்பாங்களா? காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார், எம்.ஜி.ஆர் அதைத் தொடர்ந்தார். அதிகாரிகள் என்ன கொண்டுவந்தாங்க? படிச்சவன், படிக்காதவங்கிறதுலாம் ஒரு விதியே கிடையாது.''
“அதிகாரிகளோட வரம்பைப் புரிஞ்சுக்க முடியுது. அப்படின்னா, அரசியல்வாதிகளால்தான் மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?''
“ஒரு காலத்துல இருந்திருக்கலாம். இப்ப அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டுச்சேர்ந்து வேலைபாக்குறாங்க. அவங்களுக்கு நடுவுல பிரச்னைகளே வர்றதில்லை. நல்லதோ, கெட்டதோ ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்ய முடியும். அவங்களுக்குப் பெருசா ஏதும் பிரச்னை வர்றதில்லை. பங்கு
பிரிச்சுக்கிறாங்க. ஆக, இப்போதைக்கு ரெண்டு பேர் பக்கமும் நின்னு பேச முடியாது. இது மக்களுக்குப் புரியணும்.''
மழைக்காலத்தில் காபியைவிட டீ நல்லது. ஏன்? Coffee, Tea
November 13, 2017மழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி க...
காபிடீ
டீ - காபி... என்னவெல்லாம் இருக்கின்றன?
* டீயில் ஃப்ளேவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபினால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. வைட்டமின் சி, டி, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், மாங்கனீஸ், அயர்ன், ஜிங்க், சோடியம் மற்றும் ஃபுளூராய்டு (Fluoride) போன்றவை நிறைந்துள்ளன.
* காபியில் கஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருள், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் மற்றும் பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை கப் அருந்தலாம்?
* ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் டீ குடிக்கலாம். அதிலும், வெறும் தேயிலை டீயாக அல்லாமல் மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை மாற்றி மாற்றிக் குடிப்பது நல்லது.
* ஒரு நாளைக்கு இரண்டு கப் வரை காபி குடிக்கலாம். ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் வரை காபியில் இருக்கும் கஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது காபியின் அளவு, வயது, உடல்நிலை, நம்மைச் சுற்றியுள்ள சூழல் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.
நன்மைகள்
* டீ, இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், ரத்தம், செல்கள், தசை, பற்கள், தோல் என உடல் முழுவதுக்கும் பலனளிக்கிறது. குறிப்பாக, புற்றுநோய், இதய நோய் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. நாள் முழுவதும் எனர்ஜியுடனும் மனஅழுத்தமின்றியும் இருக்கச் செய்கிறது. இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
* அல்சைமர், பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease - PD), இதயநோய், சர்க்கரைநோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. இன்னும் காபியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
மூலிகை தேநீர்
அளவுக்கு மீறினால்?!
* நான்கு கப்புக்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால், நரம்புமண்டலக் கோளாறுகள், தூக்கமின்மை, வாந்தி, பித்தம், சீரற்ற இதயத் துடிப்பு, தலைவலி போன்றவை ஏற்படும்.
* காபியில் உள்ள கஃபைன் அளவு அதிகரிக்கும்போது படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைசுற்றல், பசியின்மை போன்றவை ஏற்படும்.
யார், எதைத் தவிர்க்கலாம்?
* ரத்த சோகை உள்ளவர்கள், தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் முடிந்தவரை டீயைத் தவிர்க்கலாம். விரும்புபவர்கள் மூலிகை டீ அல்லது கிரீன் டீ அருந்தலாம்.
* வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்தவரை காபி குடிப்பதைத் தவிர்க்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கலாம்.
எந்த நேரத்தில் குடிக்கலாம்... எப்போது கூடாது?
* சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரும், சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் கழித்தும் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கக் கூடாது.
* காபி, காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரோ, பின்னரோ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம். தூங்குவதற்கு முன்னதாக காபி குடிக்கக் கூடாது.
காபியும் டீயும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பலன்களைக் கொண்டிருந்தாலும், காபியைவிட டீ சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்குக் காரணம், காபியில் உள்ள கஃபைன். நாம் குடிக்கும் ஒரு கப் காபியில் 80 முதல் 165 மில்லி கிராம் அளவு கஃபைன் இருக்கும். இது காபியின் வகையைப் பொறுத்து மாறுபடும். அதேபோல், ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் அளவு கஃபைன் உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
க்ரீன் டீ
டீயின் வகைகள்...
கிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, எலுமிச்சை டீ, புதினா டீ, துளசி இலை டீ போன்றவை.
டீ நமக்குள் நிகழ்த்தும் அற்புதங்கள்!
* டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உடல் மாசடைவதைச் சரிசெய்ய உதவும்.
* இதயத்துக்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும்.
* நரம்பு, தசை சுறுசுறுப்பாக இயங்க உதவும். உடல் புத்துணர்வு பெற உதவும்.
* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
* இதில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும்.
* மூளைச் செயல்பாட்டைச் சீராக்கும். ஒரு நாளைப் புன்னகையுடன் எதிர்கொள்ள உதவும்.
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
* கிரீன் டீ, மூலிகை டீ மற்றும் பிளாக் டீ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும். பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* டீயில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கும். உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும்.
* டீயில் உள்ள ரிபோஃப்ளேவின் (riboflavin) உடலுக்குத் தேவையான எனர்ஜியை அளிக்கும்.
* ரத்தத்தில் உள்ள செல்களின் இழப்பைத் தடுக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
* இளமையைத் தக்கவைக்க உதவும்.
* இதில் உள்ள அமினோ அமிலம், உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கும்.
சூடாகக் குடிக்கலாமா?
மிகச் சூடாக தேநீர் பருகினால் வயிற்றின் உட்சுவர் புண்ணாகும். நரம்பு மண்டலத்தையும் வயிற்றையும் பாதிக்கும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், குடல் பாதிப்படையும். டீ குடிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக தண்ணீர் குடிக்கலாம்.
டீ, காபி பழக்கம் இல்லாதவர்கள் சாப்பிட...
* இளஞ்சூடான பால் குடிக்கலாம். மஞ்சள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றைப் பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்.
* பெருஞ்சீரகத்தை சூடான தண்ணீரில் போட்டுவைத்துக்கொள்ளலாம். பிறகு ஆறிய பின்னரோ மிதமான சூட்டிலோ குடிக்கலாம்.
* ஐஸ் சேர்க்காத பழச்சாறுகளைப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சிதரும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது.
உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான்! கவிஞர் வைரமுத்து
November 13, 2017பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்ட...
இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ரசூல். இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம் தான் தலைநகர், அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர். ரசூல் ஒரு சவுண்ட் எஞ்சினியர் அல்ல, அவர் ஒரு சவுண்ட் டிசைனர். உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான். அப்படி மிகவும் பணிவானவர் இயக்குனர் பிரசாத் பிரபாகர். மலையாளத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள், இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும் என்றார் வைரமுத்து.
பூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்னபோது தான் அதந் பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன். அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம். பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல். வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு. ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி என்றார் இயக்குனர் ஷங்கர்.
2002 ஆம் ஆண்டு லண்டனில் ஏ ஆர் ரகுமான் அவர்களை சந்தித்து, உங்களின் மிகப்பெரிய ரசிகன் என சொல்லியிருக்கிறேன். 15 வருடங்களுக்கு பிறகு ஒரு இசையமைப்பாளராக, என்னுடைய இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திப்பது எனது கனவு நனவான தருணம் என்றார் இசையமைப்பாளர் ராகுல் ராஜ்.
எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். ராவணன் படத்தின் டப்பிங்கின் போது, வைரமுத்து அவர்கள் தம்பி தமிழுக்கு வா, நல்ல கதைகளை திரையில் கொடு, உனக்கு நான் ஆதரவு தருகிறேன் என்றார். இதோ வந்திருக்கிறேன், ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் முனைப்போடு. பார்வையில்லாதவர்களும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.
என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 22 மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு ஒரு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும். எந்திரன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி என்றார் படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி.
நடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கனிகா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், நாசர், இயக்குனர் கே எஸ் ரவிகுமார், எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் பிரவீன் கோகுலன், பெருவனம் குட்டன் மாரார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பெருவனம் குட்டன் மாரார் மற்றும் அவர்களின் நேரடி இசை நிகழ்வும் நடைபெற்றது.
சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
November 13, 2017காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல ...
எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.
நயன்தாராவின் அறம் படத்தில் அவர் பெயருக்குள் மறைந்திருக்கும் ரகசியம்
November 13, 2017நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி கொண்டாடும் படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்...
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார், இதில் இவர் பெயர் மதிவதனி.
இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள், தெரியாதவர்களுக்காக இதோ, LTTE-யின் தலைவர் பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான்.
அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
விஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்
November 13, 2017விஜய் மெர்சல் பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு நடுவில் விஜய், அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் ...
தற்போது திருட்டுப் பயலே என்ற படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை அமலாபால். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.
தலைவா படம் நடிக்கும் போது விஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படுவேன், அவர் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பவர். இதனால் காலை 9 மணிக்கு சூட்டிங் வரவேண்டும் என்றால் அவர் 8.30 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். நாங்கள் அனைவரும் விஜய் வந்துவிடுவாரே என்று பயந்து நாங்களும் சீக்கிரமே கிளம்புவோம் என்று கூறியுள்ளார்.
தீரன் படத்தின் கதை இதுதான்! படவேலைகளை தள்ளிவைத்த நடிகர் கார்த்தி பேட்டி
November 13, 2017சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத...
சென்னையில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி, தீரன் ஒரு வித்தியாசமான கதை. இதில் போலிஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். குற்றங்களை தடுக்க பல போலிஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் தாண்டி அவர்களின் சொந்த வாழ்க்கையை இப்படம் காட்டும். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதை அதிரடி கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதி திரட்டும் வேலைகளில் இருப்பதால் படவேலைகளை தள்ளி வைத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
அக்கா இவ்ளோ பிரச்சனை இருக்கா- அதிர்ச்சியான விஜய்
November 13, 2017தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதில் அர...
இதில் அரசாங்கத்தை எதிர்த்தும் ஒரு சில வசனங்கள் இருந்தது, இந்நிலையில் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தெறி படத்தின் படப்பிடிப்பில் விஜய்யிடம் நடிகை ராதிகா, அரசியல் குறித்து பேசியுள்ளார், பல தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட விஜய் ‘அக்கா அரசியலில் இவ்ளோ பிரச்சனை இருக்கா’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாராம்.
திரைவிமர்சனம் - ‘பவர் பாலிட்டிக்ஸுக்கு’ ஒரு சாட்டையடி, அறம் வெல்லும்.
November 13, 2017தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்கள...
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே அதிகாரத்தை மீறியதற்காக நயன்தாரா மீது ஒரு விசாரணை நடக்கின்றது. நயன்தாரா தன் விளக்கத்தை சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது.
சென்னைக்கு வெளியே தண்ணீருக்கே பல கிலோ மீட்டர் சென்று எடுக்கும் நிலையில் ஒரு கிராமம். ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் இடத்தில் நயன்தாரா கலெக்டராக வருகின்றார்.
அந்த ஊரில் இருக்கும் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிடுகின்றது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை வெளியே எடுக்க நயன்தாரா மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முடிவே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நயன்தாரா ஒன் மேன் ஆர்மி என்று சொல்வது போல் ஒன் Women ஆர்மி என்று சொல்லலாம், ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டுகின்றார். மக்களுக்காக தான் அதிகாரிகள், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தால், அவர்கள் நமக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று இவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் விசில் பறக்கின்றது. இதே வேகத்தில் களத்திற்கு வந்தால் வேறு இடமும் நயன்தாராவிற்கு காத்திருக்கின்றது.
ராமசந்திரன் துரைராஜை தமிழ் சினிமா இன்னும் பல படங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும் இப்படத்தை பார்த்த பிறகு. அத்தனை யதார்த்தமாக தன் குழந்தையை இழுந்து தவிக்கும் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். அதைவிட இவருடைய மனைவியாக வந்தவர் மிகவும் கவனிக்க வைக்கின்றார்.
காக்கா முட்டை சிறுவர்களும் இதில் நடித்துள்ளனர், அந்த படத்திற்கு பிறகு ஒரு தரமான கதாபாத்திரம். படத்தில் அரசாங்கத்திற்கு சாட்டையடியாக பல காட்சிகள் உள்ளது. ராக்கெட் எதற்கு விடுகின்றோம் என்றே தெரியாது, ஆனால், ராக்கெட் விட்டால் நாம் வல்லரசு ஆகிவிடுவோம் என்று நம்பும் மக்களை ஒரு பைட்ஸ் வடிவில் காட்டியது சூப்பர்.
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றால் பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் கணக்கில் வந்தது ஒரு சில தான், ரூ 800 கோடி செலவில் ராக்கேட் விடும் நாம், இன்னும் ஆழ்துளையில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கையிறை பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு கேரக்டர் கிண்டலாக கேட்பது நகைச்சுவை என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம்.
படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை குழந்தைக்கு என்ன ஆகும், எடுப்பார்களா, மாட்டார்களா? என ஆடியன்ஸிடமும் பதட்டத்தை உருவாக்கியதில் கோபி கண்டிப்பாக ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார். அதே நேரத்தில் குழந்தைக்கு ஆக்சிஜன் குறைகின்றதோ, இல்லையோ என்று பார்க்கும் நமக்கும் குறைந்துவிடும் போல, அந்த அளவிற்கு காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வறண்ட கிராமத்தை கண்முன் அப்படியே கொண்டு வந்துள்ளார், ஜிப்ரானின் இசையும் ரசிக்க வைக்கின்றது. பாடல்கள் என்று தனியே இல்லாமல் படத்தோடு வருவது கூடுதல் பலம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்.
நயன்தாரா இவரை நம்பி இனி எத்தனை கோடி பட்ஜெட் படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அப்படி ஒரு ஸ்கிரீன் பிரசன்ஸ்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை.
இவர்களை எல்லாம் விட ராமசந்திரன் அவருடைய மனைவி மற்றும் ஊர் மக்கள் எல்லோரின் யதார்த்த நடிப்பு.
பல்ப்ஸ்
சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
மொத்தத்தில் இன்றைய ‘பவர் பாலிட்டிக்ஸுக்கு’ ஒரு சாட்டையடி, அறம் வெல்லும்.
நெஞ்சில் துணிவிருந்தால் - திரைவிமர்சனம் - ஓகே தான். இன்னும் முழுமைப்படுத்தியிருக்கலாம்.
November 13, 2017நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களின் தாக்கம் படத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிடும். சிலர் படத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் குரல் கொடுப்பவர்...
கதைக்களம்
படத்தின் ஹீரோவான சந்தீப் கிஷன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக அப்பாவை இழக்கிறார். இவருக்கு சூரி, விக்ராந்த் என நான்கு நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை செய்யும் இவர்கள் ஒன்றாக கூடினால் எண்டர்டெயின்மெண்ட் தான்.
தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் சந்தீப் கிஷன் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஹீரோயின் மெஹ்ரினை சந்திக்கிறார். திடீரென ஒரு ஆட்டோ டிரைவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்க காதல் துளிர்விடுகிறது.
டாக்டருக்கு படிக்கும் தன் தங்கை தன் நண்பரான விக்ராந்த்தை காதலிக்கும் விசயம் தெரியவர வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கிறது. அதே நேரத்தில் வில்லனான ஹரீஷ் உத்தமன் கையில் விக்ராந்த் சிக்குகிறார். இவரை குறிவைத்து அவரது கும்பல் சுற்றிவருகிறது.
இந்த விசயம் தனக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் இவருக்கும் அவரின் தங்கை உயிருக்கும் பெரும் ஆபத்து சூழ்கிறது. தங்கையை காப்பாற்றினாரா, நண்பன் விக்ராந்த் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா, எதற்காக வில்லன் இவர்களை குறிவைக்கிறார்கள் என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ சந்தீப் கிஷன் ஒரு ஜாலியான டைப். பல தெலுங்கு படங்களில் நடித்தவர். யாருடா மகேஷ், மாநகரம் படத்திற்கு பிறகு தற்போது இப்படத்தில் இறங்கியுள்ளார். கேஷுவல் ஹீரோ போல இருக்கும் இவர் இப்படத்தில் ஓகே. இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆகியிருக்கலாமோ என தோன்றுகிறது.
சுசீந்திரன் ஏற்கனவே சொன்னது போல அவரது வழக்கமான படங்களை போல இல்லாமல், இப்படத்தில் ஹீரோயினுக்கு ஒரு சின்ன ரோல் தான். ஆனாலும் ஹீரோயின் வரும் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் அழகை கூட்டுகிறது. அதிலும் காலேஜில் இவர் செய்யும் லூட்டி ரசனை.
ஹரீஷ் உத்தமன் இப்படத்திலும் தனது திறமையை காட்டியுள்ளார். பிளான் போட்டு வேலை செய்யும் இவருக்கே கடைசியில் ஸ்கெட்ச் போட்டுவிடுவது கொஞ்சம் ட்விஸ்ட்.
காமெடிக்கு சூரி, அப்புக்குட்டி என இருவர் இருந்தாலும் சூரி தான் முன்னணியில் இருக்கிறார். வழக்கமான காமெடிகள் தான். நடிகர் விக்ராந்த் சொல்லவே வேண்டாம். ஏற்கனவே நடிப்பு திறமைக்கு பாராட்டை பெற்றவர். இப்படத்திலும் அதே போல ஸ்கோர் அள்ளுகிறார்.
முதல் கட்ட காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் கட்ட காட்சிகள் கொஞ்சம் வேகம் கூட்டுகிறது.
கிளாப்ஸ்
தமிழ்நாடு தற்போது சந்திக்கும் பிரச்சனைகளான நீட் தேர்வு குறித்து மறைமுகமாக சொன்ன விசயம் நன்று. தகுதி மதிப்பெண் பெற்றவரே உண்மையான மருத்துவராகும் தகுதியுள்ளவர் என ஹீரோ சொல்வது வேல்யூ பாயின்ட்.
பிரஸ்டீஜ் பிரச்சனையால் பல பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடுவதை வெளிச்சம் போட்டிருக்கிறார்கள். நட்பு நல்லுறவாக்கிய காட்சிகள் இளைஞர்களிடத்தில் கிரெடிஸ் கிடைக்கும்.
கிளைமாக்சில் ஹீரோ சந்தீப்பிடம் சீரியஸ்னஸ் குறைந்திருக்கிறது. சில இடங்களில் காமெடி கொஞ்சம் திருப்தி.
பல்பஸ்
சமூக வலைதளங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லும் சுசீந்திரன் முழுமையாக இப்படத்தில் விசயத்தை சொல்லவில்லையோ என தோன்றுகிறது.
அவரின் படம் தானா என சில கேள்விகள் மனதில் வருகிறது. அவருக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் நிறைவு பூர்த்தியாகவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான பிஜிஎம்.
மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் சிம்பிள். ஓகே தான். இன்னும் முழுமைப்படுத்தியிருக்கலாம்.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
November
(167)
-
▼
Nov 13
(17)
- அந்த ஒரு காரணத்தால் டி.ஆர் திட்டியபோது பொறுமையாக இ...
- ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்...
- தள்ளிப்போகும் 24-ம் புலிகேசி: வடிவேலு காரணமா?
- அக்டோபர் புரட்சியை முறியடித்த நவம்பர் சோதனை!
- ‘’ரஜினி சார் சொன்ன தத்துவம் என் வாழ்க்கையில நடந்தி...
- இளநரையை போக்க வழிகள்...?
- சிறுநீரகக்கல் !- ஏன் வருகிறது? எப்படி அறிந்து கொள்...
- “ ‘அறம்’ படத்தில் நடப்பது நிஜத்தில் சாத்தியமா?” - ...
- மழைக்காலத்தில் காபியைவிட டீ நல்லது. ஏன்? Coffee, Tea
- உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான்! கவிஞர் வைரமு...
- சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
- நயன்தாராவின் அறம் படத்தில் அவர் பெயருக்குள் மறைந்த...
- விஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் ந...
- தீரன் படத்தின் கதை இதுதான்! படவேலைகளை தள்ளிவைத்த ந...
- அக்கா இவ்ளோ பிரச்சனை இருக்கா- அதிர்ச்சியான விஜய்
- திரைவிமர்சனம் - ‘பவர் பாலிட்டிக்ஸுக்கு’ ஒரு சாட்ட...
- நெஞ்சில் துணிவிருந்தால் - திரைவிமர்சனம் - ஓகே தான...
-
▼
Nov 13
(17)
-
▼
November
(167)