June 18, 2018
சி.டி.இ.டி தேர்வில் தமிழ் மறுப்பா..? -என்ன சொல்கிறார் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
June 18, 2018<
மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. `இந்தத் தகவல் உண்மையில்லை' என்று மறுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். இதைத் தவிர, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் சைனிக் உள்ளிட்ட பள்ளிகளும் ஆசிரியராகப் பணியாற்ற இந்தத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வினை, மத்திய இடைநிலை கல்விவாரியம் சி.பி.எஸ்.இ எடுத்து நடத்தி வருகிறது. தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களை கொண்ட சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட...