November 15, 2017
<
பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது.ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல்...
November 15, 2017
அரவிந்த்சாமியை பார்த்தாவது மற்றவங்க திருந்துங்க!
November 15, 2017தயாரிப்பாளரின் ரத்தக் கண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்க சொன்னால், சப்புக் கொட்டிக்கொண்டே குடிக்கும் ஜீவன்களில் முக்கியமான ஜீவன், அப...
<
தயாரிப்பாளரின் ரத்தக் கண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்க சொன்னால், சப்புக் கொட்டிக்கொண்டே குடிக்கும் ஜீவன்களில் முக்கியமான ஜீவன், அப்படத்தில் நடிக்கும் ஹீரோதான். சின்ன ஹீரோக்களுக்கு வற்றிப்போன ரொட்டி கூட கிடைக்காது. அதுவே பெரிய ஹீரோக்கள் என்றால், தாகம் தீர்ப்பதென்றால் கூட நதி ஓட வேண்டும். இந்த ஜீவாதார மேடு பள்ளங்களை ஆராய்ந்தால் தித்திப்பும் கசப்புமாக திகட்ட திகட்ட நியூஸ் கொட்டும்.நாம் சொல்ல வருவது முக்கியமான விஷயம். சம்பளத்தை ஆரம்பத்திலேயே மொத்தமாக கொடுங்க. அப்பதான் இமிடியெட் கால்ஷீட் என்று சொல்லி சொல்லியே படம் எடுக்கிற பணத்தையும் சேர்த்து அறுவடை செய்யும் ஹீரோக்கள், அந்த படம் முடிந்த பின்பு தயாரிப்பாளர் ரிலீசுக்கு படும் பாட்டை துளி கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தியில் அப்படியில்லை. ஒரு சின்ன அட்வான்ஸ். படம் முடிந்து வியாபாரம் ஆன பின்தான் மீதி சம்பளம். அது யாராக இருந்தாலும்…அப்படியொரு ஸ்டைலுக்கு வந்திருக்கிறார் அரவிந்த்சாமி. முன்னணி ஹீரோக்களுக்கு...
November 15, 2017
இயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..! -பத்திரிகையாளர் பா.ஏகலைவன்
November 15, 2017அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந...
<
அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம்.தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அழைத்தாக வேண்டும். பல நண்பர்களிடம் தொடர்பில் இருந்தேன். அப்படித்தான் திருவள்ளூர் மாவட்ட தினமலர் நிருபரான தம்பி தேவேந்திரன் ’மீஞ்சூர் கோபி’யை தரைமணி திரைப்பட படபிடிப்பு தளத்திற்கு அழைத்த வந்தார். ஏற்கனவே அறிந்திருந்த சகோதரர்தான். ஆனால் நிகழ்ச்சிகளில் பேசி கண்டதில்லை.இன்றைய ஊடகங்களில் ‘வரும்’ சமூக ஆர்வலர்களுக்கான ‘கோட்வேட்’ ஏதுமில்லை கோபியிடம். அப்பட்டமான கிராமத்து முகம்.பேச்சும் அப்படித்தான். கண்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது அனலாக. இந்த நிகழ்ச்சிக்கு சரியாக இருக்குமா என்ற தயக்கம். ‘சாதாரணமா நினைக்காதீங்க. அடிச்சி பட்டைய கிளப்புவாரு அண்ணன்’ என்றார் தம்பி தேவா.அதற்குள் தளத்திற்கு சீமான் அவர்கள் வந்துவிட்டார். கோபியைக் கண்டதும், ‘அடடே நீயாடா தம்பி, வா..வா என...
November 15, 2017
போலீஸ்னா வேற ஆளு இல்ல! தீரன் போலீஸ் கார்த்தி பேச்சு
November 15, 2017விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி கார்த்தி சொல்வதென்ன- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கி...
<
விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி கார்த்தி சொல்வதென்ன-நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது.போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக்கொண்டிருந்திருக்கிறார் ஆனால் அவர்கள் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக...
November 15, 2017
த்ரிஷாவை சமாதானப்படுத்த விக்ரம் செய்த விஷயம்
November 15, 2017ஹரி இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் சாமி 2வில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பகுதியில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்க...
<
ஹரி இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் சாமி 2வில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.முதல் பகுதியில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்கு சிறிய நேரம் மட்டும் திரையில் வரும் அளவுக்கு முக்கியமில்லாத கதாபாத்திரம் மட்டும் கொடுக்கப்பட்டது.அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது விக்ரம் த்ரிஷாவை நேரில் சந்தித்து சமாதானபடுத்தியுள்ளார். அதன் பிறகு த்ரிஷா மீண்டும் படத்தில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
November 15, 2017
அறம் படத்தின் மொத்த வசூல்- மாஸ் காட்டிய நயன்தாரா
November 15, 2017நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அறம். இப்படம் அனைத்து தரப்பினர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நில...
<
நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அறம். இப்படம் அனைத்து தரப்பினர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ 4.4 கோடி வசூல் செய்தது, இதுதான் ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்.தற்போது 5 நாள் முடிவில் அறம் தமிழகத்தில் மட்டுமே ரூ 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, எப்படியும் அறம் ரூ 12 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)