­
05/05/17 - !...Payanam...!

பாகுபலி இந்திய சினிமாவின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க பல நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த...

பாகுபலி இந்திய சினிமாவின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க பல நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்ததாம், அவர்கள் யார் என்று பார்ப்போம். இதில் பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு ஹிரித்திக் ரோஷன், ராணா கதாபாத்திரத்திற்கு ஜான் ஆபிரஹாமிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது. மேலும், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது, அதேபோல் தமன்னாவிற்கு சோனம் கபூர் தான் முதல் சாய்ஸாக இருந்ததாம். ஆனால், படம் ரிலிஸிற்கு பிறகு இவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், இத்தனை நன்றாக படம் வந்திருக்காது என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ...

Read More

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அதே பெயரில் நடத்தவுள்ளார். அந்...

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அதே பெயரில் நடத்தவுள்ளார். அந்த நிகழ்ச்சிக்காக தற்போது 1 கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாம். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிப்பார்கள். அதில் யார் கடைசிவரை இருக்கிறார்க்ளோ அவர்களே வெற்றியாளர். தற்போது வந்துள்ள தகவல்படி இந்த நிகழ்ச்சியில் இரண்டு அரசியல்வாதிகள் மற்றும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். மற்ற போட்டியாளர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More

பாகுபலி-2 உலகம் முழுவதும் வசூல் மழை பொழிகின்றது. இப்படத்தின் வசூல் இன்னும் இரண்டு தினங்களில் ரூ 1000 கோடியை தாண்டும். இந்நிலையில் இப்படத்...

பாகுபலி-2 உலகம் முழுவதும் வசூல் மழை பொழிகின்றது. இப்படத்தின் வசூல் இன்னும் இரண்டு தினங்களில் ரூ 1000 கோடியை தாண்டும். இந்நிலையில் இப்படத்தில் பலராலும் கொண்டாட்டப்பட்டு வருவது இடைவேளை காட்சி தான். இந்த காட்சியில் ராணா பதவியேற்க, எல்லோரும் பாகுபலி...பாகுபலி என்று சொல்ல இந்த காட்சி பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த காட்சி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டதாம், ஏனெனில் எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலும் இவர் பெயர் சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும். அதனாலேயே அந்த காட்சியை அப்படி வடிவமைத்தேன் என பாகுபலி கதையாசிரியர் விஜயந்திரபிரசாத் கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About