June 16, 2019
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஏகப்பட்ட மர்மங்கள் நடந்ததே கவனீச்சிங்களா?
June 16, 2019என்னவோ நடக்குது, ஒன்னுமே புரியலைன்னு இந்திய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து...
என்னவோ நடக்குது, ஒன்னுமே புரியலைன்னு இந்திய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து.
எல்லாம் ஆரம்பித்தது, ரோகித் ஷர்மா அவுட்டானதில் இருந்து. அதிலும், இந்திய பந்து வீச்சின்போது, இன்னும் சில பல நிகழ்வுகள் மர்மமாகத்தான் இருந்தன.
சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார் ரோகித் ஷர்மா. ஆனால், திடீரென சம்மந்தமே இல்லாமல் ஒரு ஸ்கூப் ஷாட் ஆடி, நேராக ஷாட் ஃபைன் லெக்கில் நின்று கொண்டிருந்த வகாப் ரியாசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஏன் அடித்தார்
அவர் எதற்காக அப்படி ஒரு ஷாட்டை அடித்தார் என்று அவருக்கும் தெரியவில்லை, ரசிகர்களுக்கும் புரியவில்லை. எனவேதான், கோபமாக பேட்டை காற்றில் வேகமாக அடித்துவிட்டு கிளம்பினார் ரோகித் ஷர்மா. பீல்டர் அங்கே நின்றதை கூட ரோகித் ஷர்மா கவனிக்காமல்தான் அந்த ஷாட்டை அடித்ததாக வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.
பேட்டிலேயே படவில்லை
இதன்பிறகு, விராட் கோலி நன்றாக பேட் செய்து கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், அனுபவ வீரரான அவர் களத்தில் நிற்கத் தேவையிருந்தது. ஆனால், அமீர் வீசிய பவுன்சர் பந்து பேட்டில் படாமல், விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதற்கு நடுவரும் அவுட் கொடுக்காமல்தான் இருந்தார். ஆனால் கோலிதான், அவராகவே, அவுட் என நினைத்துக் கொண்டு (அறிவித்துக் கொண்டு) பெவிலியனுக்கு சென்றுவிட்டார்.
புவனேஸ்வர் குமார்
இந்தியா இதன்பிறகு பந்து வீச்சை தொடங்கியது. 5வது ஓவரை, புவனேஸ்வர் குமார் வீசியபோது, காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறி வெளியேறிவிட்டார். அந்த ஓவரில் மிச்சமிருந்த 2 பந்துகளையும் விஜய் சங்கர் வீசினார். சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தானை திணற வைத்தவர்தான் புவனேஸ்வர்குமார்.
எல்பிடபிள்யூ போகவில்லை
இதுமட்டுமா. சஹல் வீசிய ஒரு ஓவரில், நன்கு ஆடிக்கொண்டிருந்த பாபர் காலில் பந்து பட்டது. எல்பிடபிள்யூவிற்கு முறையிட்டும், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. விராட் கோலி, சஹல், தோனி ஆகியோர் ஆலோசித்தனர். ஆனால், டிஆர்எஸ் அப்பீலுக்கு இந்தியா போகவில்லை. டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, அந்த பேட்டில் படாமல் பந்து காலில் பட்டு எல்பிடபிள்யூ அவுட்டுக்கு வசதியாக போனது தெரியவந்தது. ஆனால், இதை ஏன் கேட்கவில்லை என்பதுதான் தெரியவில்லை.
இதற்கு முன்பு இப்படி இல்லை
இன்றைய போட்டியில் இந்தியா வழக்கமான தனது தரத்திற்கு ஈடு செய்யும் வகையில் ஃபீல்டிங்கும் செய்யவில்லை. ஏகப்பட்ட மிஸ் ஃபீல்டுகள் அரங்கேறின. இவை அனைத்துமே, வேறு எந்த போட்டியிலும், நடைபெறாத நிகழ்வுகள் என்பதால்தான், இதை மர்மமாகவே இருக்கே என தலையை பிய்த்துக் கொண்டனர் ரசிகர்கள்.