January 09, 2017
பிரசவத்தின் போது கணவர் அல்லது உறவினர் உடனிருக்கும் போக்கு அதிகரிப்பு!
January 09, 2017 உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவரின் துணையின்றியே நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின்போது மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே“பிரசவ நேரத்தில் அனுமதிக்கப்படும் சொந்தங்களால், வலியால் துடிக்கும் பெண்ணுக்கு தொடர்ச்சியான நேரடி ஆதரவை வழங்க முடியும். குறிப்பாக, பெண்களை உடன் அனுமதிக்கும் போது, வசதியாக உணரச் செய்து, இயற்கையான முறையில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையை தவிர்த்து, குறைந்த செலவிலான இயற்கை...