November 24, 2016
20 ரூபாய் டாக்டரும்... குரங்கைக் கொன்ற மருத்துவ மாணவர்களும்... இரு நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை!
November 24, 2016 இதைப்பற்றி நாம் பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை. அப்படி நாம் பேசுவதால் பலன் கிடைக்கும் என்றால், பல அடுக்கு கொண்ட மாடி ஒன்றின் மேல் இருந்து நாயை கீழே விட்டெறிந்த சம்பவத்தை பற்றி நாம் பேசிய பேச்சுக்கு, இந்த சம்பவம் நடந்திருக்காது. நடந்திருக்கவும் கூடாது. நாயை மாடியில் இருந்து தூக்கி எரிந்த மருத்துவ மாணவர்களின் கொடூர செயல் கண்டனத்துக்குள்ளான அதே சூழலில், மருத்துவ மாணவர்களின் மனநிலையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாய் தாங்கி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்ற கேள்வியை மிக அழுத்தமாய் பதிவு செய்திருந்தது அந்த சம்பவம். ஆனால் அதன் மீது எழுப்பப்பட்ட கேள்விகளும், மருத்துவ மாணவர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் நடந்த விவாதமும் எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவம் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் மருத்துவ...