June 15, 2019
June 15, 2019
கேம் ஓவர் திரை விமர்சனம்
June 15, 2019டாப்ஸி தமிழ் சினிமாவில் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயினாக அறிமுகமாகி ஹிந்தி பக்கம் சென்று பிங்க் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர். அ...
டாப்ஸி தமிழ் சினிமாவில் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயினாக அறிமுகமாகி ஹிந்தி பக்கம் சென்று பிங்க் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர். அதை தொடர்ந்து இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கங்கனம் கட்டி கலக்கி வருகின்றார், அந்த வகையில் மாயா என்ற திகில் படத்தை கொடுத்த இயக்குனர் அஸ்வினுடன் கைக்கோர்த்து கேம் ஓவர் என்ற படத்தை கொடுத்துள்ளார் டாப்ஸி, இதிலும் முத்திரை படைத்தாரா, பார்ப்போம்.
கதைக்களம்
படம் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்கின்றது, அதை தொடர்ந்து டாப்ஸி நியூ இயர் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கின்றார்.
அதை தொடர்ந்து அவருக்கு இருட்டை கண்டாலே பயமாக இருக்க, ஒரு கட்டத்தில் இவர் கையில் குத்தியிருக்கும் டாட்டூ அடிக்கடி வலிக்க ஆரம்பிக்கின்றது.
ஏன் அந்த டாட்டூ இவருக்கு வலிக்க ஆரம்பிக்கின்றது, இதற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன என்று டாப்ஸி தேட ஆரம்பிக்க, அதன் பின் நடக்கும் திகில் சம்பவங்களே இந்த கேம் ஓவர்.
படத்தை பற்றிய அலசல்
டாப்ஸி தேர்ந்தெடுத்து நடித்தாலே அது தரமான படம் தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார், காட்சிக்கு காட்சி அவர் பயப்படுகிறாரோ, இல்லையோ, அவர் வழியாக நமக்கு பயத்தை கடுத்துகின்றார்.
திகில் படம் எடுப்பதில் செம்ம எக்ஸ்பெட் என்பதை அஸ்வின் இதிலும் நிரூபித்துள்ளார், படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலும், டாப்ஸி உதவியாளராக வரும் வினோதினி எப்போதும் போல் யதார்த்த நடிப்பில் அசத்துகிறார். படமே ஒரு வீடியோ கேம் பின்னணியில் ஆரம்பித்து, அதன் வழியாக கதை சொன்ன விதம் சூப்பர்.
கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அஸ்வின் அடைவார், படத்தின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுவது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். ரான் ஈதன் இசை கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு.
க்ளாப்ஸ்
டாப்ஸி மற்ற நடிகர், நடிகைகள் நடிப்பு.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் தரம்.
படத்தின் திரைக்கதை.
பல்ப்ஸ்
அனைத்து தரப்பு அதாவது பி, சி ஆடியன்ஸுக்கு எளிதில் புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.
மொத்தத்தில் ஒரு திகில் கலந்த வீடியோ கேமிற்குள் சென்று அதை வெற்றிக்கரமாக முடித்து வந்த அனுபவம் இந்த கேம் ஓவர்.