October 21, 2016
சிவநாகம் -திரைவிமர்சனம்
October 21, 2016கோலிவுட் சினிமாவில் காதல் படங்கள் நிறைய வந்தாலும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் வரலாறு, ஆன்மிகம் தொடர்பான கதைகள் ஹிட்டாகி விடுகிறது. மாடர்ன...
கோலிவுட் சினிமாவில் காதல் படங்கள் நிறைய வந்தாலும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் வரலாறு, ஆன்மிகம் தொடர்பான கதைகள் ஹிட்டாகி விடுகிறது. மாடர்ன் ட்ரெண்டுக்கேற்ப வெளிவந்திருக்கும் சிவநாகம் எல்லோரையும் மயக்குமா என்று பார்ப்போம்.
கதைக்களம்
இசைக்குழு நடித்துவரும் திகாந்த் மாஞ்சலே இடம் இசை பயிற்சி பெறுவதற்காக தீவிரம் காட்டும் ரம்யா, சக்தி நிறைந்த கலசத்தை அடைய நினைப்பவர்களை நாகமாக மாறி அழிக்கிறார். அவருக்கும் கலசத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லறது மீதிக் கதை.
படத்தை பற்றிய அலசல்
நடிகர் திகாந்த் மாஞ்சலே இசை தீவிர ஆர்வம் காட்டுவதால், தானே ஒரு இசை பள்ளியை நடத்தி வருகிறார். இசைக்கற்க நினைக்கும் ரம்யா அவரிடம் அணுகும் போது அவமானப்படுகிறார். பின் அவரது அம்மாவை தன்வசமாக்கி, திகாந்த் மனதில் இடம் பெறுகிறார்.
உலக அளவில் இசை போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு அபூர்வ சக்தி கொண்ட கலசம் பரிசாக கிடைக்கும். இது யார்க்கு கிடைக்கிறதோ அவர்கள் அதிமான செல்வம் கொண்டவர்களாக உயர்வார்கள்.
இதை குறுக்கு வழியில் அடைய திட்டம் போடும் செல்வந்தர் தர்சன் பேராசையால் சில்மிஷங்கள் செய்ய, இன்னொரு பக்கம் அந்த கலசத்தை அடைய நினைப்பவர்களுக்கு நாகமாக மாறும் ரம்யாவால் ஆபத்து வருகிறது.
ரம்யா எதற்கு இப்படி செய்ய வேண்டும். அவருக்கும் அபூர்வ கலசத்திற்கும் என்ன தொடர்பு என்பதை சொல்கிறது முழுக் கதை.
யாருக்கு கலச கிடைக்கிறது அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நவீன மாற்றத்திற்கு ஏற்ற படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா.
விறு விறுப்பான கதைக்கு ஏற்றபடி பின்னணி கொடுத்து இசையமைத்திருக்கிறார் குருகிரண். படத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேணு கோபால்.
கிளாப்ஸ்
ரம்யா கேரக்டர் அனேக இடங்களிலும் வருவதை உணர்ந்து தெளிவான வசனத்தாலும், அழகான தோற்றத்தாலும் அனைவரையும் கவர்கிறார். மாஞ்சலே சரியான நாடக பயிற்றுனர் என்று திறமை காட்டியுள்ளார்.
பல்ப்ஸ்
வழக்கம் போல பழி வாங்கும் கதை.
மொத்தத்தில் சிவநாகம் பெயர் சொல்லும்.