December 11, 2016
செகண்ட் இன்னிங்க்ஸில் சொல்லி அடித்திருக்கிறதா சென்னை 28 அணி? - சென்னை 28 II விமர்சனம்
December 11, 2016 வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28. நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கிறது டீம்.நிஜமாகவே “தி பாய்ஸ் ஆர் பேக்” தானா...! சென்னை ஷார்க்ஸ் டீம் முதல் பாகத்தில் ராக்கர்ஸை செமி ஃபைனலில் ஜெயித்து இத்தோடு 10 வருடங்கள் ஆகிவிட்டன. ப்ளேயர்ஸ் எல்லோருமே வேறுவேறு இடத்தில் வேலை, மனைவி, குழந்தை என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெய் திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். ஐடியில் வேலை செய்யும் ஜெய்யின் காதலி தான் சானா அல்ஃதாப். இவர்களின் திருமணத்திற்காக சென்னை 28 டீம், தேனி பக்கம் ட்ரிப் அடிக்கிறார்கள். அரவிந்த் ஆகாஷ் தேனியில் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன். அவரது அணிக்கு கடும் சவாலாக எட்டு வருடங்களாக கோப்பையை வென்று கொண்டிருக்கிறது வைபவின் அணி. தனது டீம் நண்பர்கள் தேனியில் வந்து...