September 07, 2018
இமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு
September 07, 2018<
ஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…? துண்டை உதறி தோளில் போட்டுட்டு போயிட்டாரு. கடன் காரனுங்களோட மாரடிக்கிறது நான்தானே” என்று இன்னமும் ஆவியாய் அசரீரி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் அநேக தயாரிப்பாளர்கள். அப்படியொரு இயக்குனர் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் அஜய் ஞானமுத்து. இத்தனைக்கும் இவர் இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’, குதிரைப் பாய்ச்சல் வெற்றி.சொன்ன பட்ஜெட் ஒன்று. முடிந்த பட்ஜெட் இன்னொன்று. அதிகப்படியான நாட்கள், கி.மீட்டர் நீளத்திற்கு புட்டேஜ் என்று அஜய் ஞானமுத்துவிடம் சிக்கி அநியாயத்துக்கு துவண்டு போனார் கேமியோ பிலிம்ஸ் சிஜே.ஜெயக்குமார். எப்படியோ, அறிவிக்கப்பட்ட நாளில் போராடி, முட்டி பெயர்ந்து ரிலீஸ் ஆனது இமைக்கா நொடிகள். பல ஊர்களில் இரவுக் காட்சிதான் ஓப்பன் ஆனது. நல்லவேளை… நயன்தாராவும் அனுராக் காஷ்யப்பும் காப்பாற்றினார்கள் படத்தை.படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் ஆன பின்பும் 350 தியேட்டர்களுக்கு குறையாமல் ஒடிக் கொண்டிருக்கிறது படம்....