நடிகர் சங்க தேர்தலில் நடத்த சண்டையால் விஷால் மற்றும் சரத்குமார் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியை விஷால்...

<
நடிகர் சங்க தேர்தலில் நடத்த சண்டையால் விஷால் மற்றும் சரத்குமார் ஆகியோர் இரு துருவங்களாக உள்ளனர். ஆனால் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியை விஷால் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாகவே கிசுகிசு உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் "சரத்குமாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஷால் "அவரிடம் பிடித்த விஷயம், அவரது ஃபிட்நஸ். அதைத்தாண்டி, அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம், அவர் வரலக்ஷ்மியின் அப்பா" என கூறினார். ...

Read More

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோ சர்ச்சைகளுக்கு நடுவே சென்றமாதம் முடிவடைந்தது. இறுதியில் ஆர்யா ...

<
நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஷோ சர்ச்சைகளுக்கு நடுவே சென்றமாதம் முடிவடைந்தது. இறுதியில் ஆர்யா எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் தனக்கு நேரம் வேண்டும் என கூறி யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ள எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் ஜனனி "இறுதியில் நான் இருந்து ஆர்யா என்னை தேர்ந்தெடுத்திருந்தால் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன். காமெராவிற்கு பின் இருக்கும் உண்மையான ஆர்யாவை தெரிந்துகொள்ள நேரம் வேண்டும் என்று தான் கேட்டிருப்பேன்" என கூறியுள்ளார்.மேலும் எங்க வீட்டு நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது, ஏதோ 16 பெண்களை ஏலம் விடுவது போல இருந்தது என ஜனனி கூறியுள்ளார். ...

Read More

விக்ரம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். அதிலும் ஐ...

<
விக்ரம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டே இருப்பார்.அதிலும் ஐ படத்தில் இவர் அடைந்த கஷ்டங்களை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இப்படத்திற்காக 30 கிலோ வரை எடையை குறைத்தார்.இந்நிலையில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இவர் நடித்து வரும் மாவீர் கர்ணா படத்திற்காக விக்ரம் கடுமையாக உடல் எடையை ஏற்றவுள்ளாராம்.அதனால், மீண்டும் கடுமையான உடற்பயிற்சியை விக்ரம் எடுத்துவர, இந்த படத்திற்காக விக்ரம் எந்த கெட்டப்பில் வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. ...

Read More

கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் தான் ஹேராம். இப்படம் வந்த போது யாரும் பெரிதும் பாராட்டவில்லை, ஆனால், வழக்கம் போல் தற்போது தலையில் தூக்கி கொண்ட...

<
கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் தான் ஹேராம். இப்படம் வந்த போது யாரும் பெரிதும் பாராட்டவில்லை, ஆனால், வழக்கம் போல் தற்போது தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.ஹேராம் படத்திற்கு இசை இளையராஜா, இவரின் இசை படத்திற்கு பெரும் பலம், ஆனால், முதலில் இப்படத்திற்கு இசையமைத்தது வேறு ஒரு இசையமைப்பாளராம்.அவர் அந்த படத்திலிருந்து விலக, கமலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராஜாவிடன் போய் நின்றாராம்.அப்போது இளையராஜா நீ கவலைப்படாதே, என்று கூறி, முன்பு வாய் அசைத்த பாடலுக்கும், காட்சிக்கும் கொஞ்சம் கூட தவறில்லாமல் இசையமைத்து கொடுத்தாராம்.இந்தியாவிலேயே இப்படி ஒரு விஷயத்தை இளையராஜா தவிர வேறு யாரும் செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

‘ஏதாவது புதுசா செய். இல்லேன்னா நீ பழசாதான் இருக்கணும்’ என்கிற எச்சரிக்கையை எடுத்துக் கொள்ளாவர்களுக்கு ஈறும் பேனும்தான் தேறும். அரைத்த மாவைய...

<
‘ஏதாவது புதுசா செய். இல்லேன்னா நீ பழசாதான் இருக்கணும்’ என்கிற எச்சரிக்கையை எடுத்துக் கொள்ளாவர்களுக்கு ஈறும் பேனும்தான் தேறும். அரைத்த மாவையே அரைக்கிறவர்களுக்கு கோடம்பாக்கத்தில் குஸ்கா கூட கிடைக்காது என்கிற புத்தி வரும்போதுதான், தானாகவே யோசிக்கிறார்கள். அப்படியொரு யோசிப்புதான் புருஸ் லீயை மீண்டும் கொண்டு வந்தது.கோடம்பாக்கத்தில் சுமார் 20 வருஷமாக வாய்ப்புக்காக அலைந்த முளையூர் ஏ சோனை, சம்திங் புதுசு என்கிற கொள்கைக்கு வந்ததும்தான் வாய்ப்பு கதவை தட்டியது. புருஸ்லீயை வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுப்பது. அதற்காக புருஸ் லீ மாதிரியே ஒரு நபரை பிடிப்பது. இந்த நோக்கத்தில் அலைய ஆரம்பித்த சோனைக்கு, பசுஞ்சோலையாக கண்ணில் சிக்கினார் ஷான்.ஆஹா… கண்டேன் சீதையை ரேஞ்சில் அவரை கப்பென்று அமுக்கினார். ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஷான் வரும்போதே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி, புரூஸ்லியின் வெறியோடுதான் திரிந்து கொண்டிருந்தார்.அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மேஜிக். மெலடி ட்யூன்களுக்கு பெயர் போன சவுந்தர்யனை...

Read More

ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு அந்த மெஷினில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி கழண்டு வந்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கனரா ஏ...

<
ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு அந்த மெஷினில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி கழண்டு வந்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.கனரா ஏடிஎம்- ஸ்கிம்மர் கருவிஏடிஎம் கார்டு விவரங்களைப் போன் மூலம் கேட்டு பண மோசடி சம்பவங்கள் நடப்பது ஒரு பக்கமென்றால், ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் போன்ற கருவிகளைப் பொறுத்தி ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி அதன் மூலம் பலபேருடைய பணத்தை எங்கிருந்தோ கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்துகொண்டேதான் உள்ளது. எவ்வளவுதான் விழிப்பாக இருந்தாலும் ஏடிஎம் மோசடிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கு மதுரையில் நடந்த சம்பவமே உதாரணம்.அசோக் என்ற இளைஞர் நம்மிடம், ''மதுரை வடக்கு வெளி வீதி கனரா வங்கி ஏ.டி.எம்-மில் நேற்று இரவு பணம் எடுக்கச் சென்றேன். பணம் எடுத்துவிட்டேன், அப்போது கார்டு போடும் இடம் ரொம்ப இறுக்கமாக இருந்தது. இரண்டாவது முறை கார்டு போட்டு இழுக்கும்போது அதிலிருந்து ஒரு தகடு  கழண்டு வந்தது. அதுதான் ஸ்கிம்மர் கருவி என்பதைப் புரிந்துகொண்டேன்....

Read More

Search This Blog

Blog Archive

About