June 14, 2019
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்
June 14, 2019<
சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிட்டுவதில் தான் சிக்கில். அவர்களில் சிலர் அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறார்கள். அவர்களின் புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. சரி வாருங்கள் நாமும் படத்துடன் சேர்ந்து ஓடுவோம்..கதைக்களம்படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.ஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள்...