­
10/24/16 - !...Payanam...!

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் ரிலீஸாகாத தீபாவளி, அவர்களது ரசிகர்களுக்கு கறுப்பு தீபாவளி என்பார்கள். வருகிற தீபாவளிக்கு தனுஷின் கொடி,...

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் ரிலீஸாகாத தீபாவளி, அவர்களது ரசிகர்களுக்கு கறுப்பு தீபாவளி என்பார்கள். வருகிற தீபாவளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா, மா கா பா வின் கடலை, நதியா நடித்திருக்கும் திரைக்கு வராத கதை என நான்கு படங்கள் வருகின்றன. ஆனால் சென்னையில் மட்டும் ரஜினி, விஜய் படங்கள் ரிலீஸாகின்றன. ஆம், ரஜினி நடித்த கபாலி படத்தையும் விஜய் நடித்த தெறி படத்தையும் தீபாவளியன்று மீண்டும் திரையிடுகிறார்கள். சென்னை ரோகினி தியேட்டரில் தீபாவளியன்று (29.10.2016) காலை 8.30 மணிக்கு கபாலியும் தெறியும் திரையிடப்படுகிறது. இதனை அறிந்த சென்னைவாசிகள் கடகடவென 8.30 மணி காட்சிக்கான டிக்கெட்களை புக் செய்து விட்டனர். ஆனால், தீபாவளியன்று காலை 8.30 காட்சி மட்டும் தான் இந்த இரு படங்களையும் திரையிடுகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளிக்கும் செய்தியாகும். தீபாவளியன்று தெறி 200-வது நாளும் கபாலி 100-வது நாளாகும் என்பது...

Read More

மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது 'வைத்திய சாவு'. இம்முறை மூன்று உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள், ...

<
மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது 'வைத்திய சாவு'. இம்முறை மூன்று உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமம்,பேரூர், மாவட்ட தலைநகரங்கள் என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் உள்ள மாநிலம் தமிழகம். கல்வி அறிவிலும் ஒப்பீட்டு அளவில் சிறப்பான நிலையிலே உள்ளது. ஆனாலும்  தென்காசி அருகில் நீரிழிவு நோய் போக்கும் 'நாட்டு மருந்து'  சாப்பிட்டு 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் போல் அடிக்கடி  நடந்து  கொண்டுதான் இருக்கிறது. "அறிவியல்பூர்வமாக சோதனை செய்யாத, அரசிடம் முறையாக அங்கீகாரம் பெறாத எந்த ஒரு வைத்திய முறையையும் பின்பற்றுவது நல்லதல்ல என்றுதான் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. அவர் என்ன வகையான முலிகை,வேர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கடும் விஷத்தன்மையுள்ள மருந்து அதில் இருந்துள்ளது. அதனால்தான் இப்படி உடனே இறந்துவிட்டனர். நாங்கள் எங்களின் பேஷன்ட்களுக்கு பரிந்துரைக்கும் டயட் கூட அரசால் அங்கீகரிக்கப்பட்ட டயட் தான் வழங்குகிறோம். நகர...

Read More

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கே...

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரளா. கேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கேரளாவில் கொட்ட அனுமதிக்கப்படாத அபாயகரமான மருத்துவ கழிவுகளை, பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது தெரியுமா? சந்தேகமே வேண்டாம் தமிழகத்தில் தான். கேரளாவில் அபாயகரமான மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் அழிக்காத மருத்துவமனைகள் மீது கேரளா அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால், மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. கோவை, தேனி, நெல்லை...

Read More

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 32 நாட்கள் கடந்துவிட்டன. இந்நிலையில், 'கார்டன் சமையல்காரர்கள், ஆஸ்தான ஜோதிடர...

<
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 32 நாட்கள் கடந்துவிட்டன. இந்நிலையில், 'கார்டன் சமையல்காரர்கள், ஆஸ்தான ஜோதிடர்களின் வருகை என மருத்துவமனை களைகட்டத் தொடங்கிவிட்டது. முதல்வர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி தீவிர சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட சிகிச்சையில் பெருமளவு குணமடைந்துவிட்டார். தற்போது கை, கால்களுக்கு தொடர் பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர் சிங்கப்பூர் மருத்துவர்கள். 'மருத்துவர்களிடம் உரையாடும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என அறிக்கையும் வெளியானது. "வேகவைத்த ஆப்பிள் துண்டுகளை சாப்பிடுகிறார்; நோய் எதிர்ப்பு மருந்துகளை படிப்படியாக அவர் உடல் ஏற்றுக் கொள்கிறது" என விவரித்த கார்டன் உதவியாளர் ஒருவர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் ஒருவாரத்தில் மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் குழுவின்...

Read More

பரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் ச...

பரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் சுமோக்கள் - இவை மட்டும்தான் வில்லத்தனம் என்பதில்லை. ஒற்றைப் பார்வையில், நடந்து வரும் தோரணையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம் கிட்னியை ஓவர்டைம் பார்க்கவைக்கும் சுரீர் வில்லன்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். என்ன, அப்போது மீம்களும், சோஷியல் மீடியாக்களும் இல்லாததால் அவர்களைக் கொண்டாட முடியவில்லை. அதனாலென்ன, இப்போது கொண்டாடி விடுவோம். ஆர்.பி.விஸ்வம்: 'அறுவடை நாள்', 'புது வசந்தம்', 'சீவலப்பேரி பாண்டி' எனப் பல படங்களில் வில்லத்தனம் காட்டியவர். கருப்பு நிறமும் முரட்டு முகமுமாய் இவர் ஃப்ரேமில் வந்தாலே ரசிகர்களுக்கு திகில் கிளம்பும். விதிவிலக்காய் 'உருவம்' படத்தில் நல்லது செய்யும் சாமியாராய் நடித்தார். ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சில படங்களில் முரட்டுத்தனம் காட்டியவர் பின் காணாமல் போனார். தமிழ்சினிமா கொண்டாட மறந்த திறமையான நடிகர்களுள் இவரும் ஒருவர். மிஸ்...

Read More

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால்...

<
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால், அதிமுக வினருக்கு மட்டுமல்ல, கட்சி சாராத தாய்குலங்களுக்கும் கூட பெருத்த மகிழ்ச்சி. அவரது உடல் நிலையை நேரில் விசாரிப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு சென்று வந்தது, அரசியல் வானின் ஆரோக்கிய சிக்னல்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், சமுகத்தின் பல்வேறு மட்ட பிரமுகர்களும் அன்றாடம் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்கள். திரையுலக நட்சத்திரங்களும் கூட, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து வர விரும்புகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் மகள் ஐஸ்வர்யாவோடு அப்பல்லோவுக்கு சென்று வந்தது நினைவிருக்கலாம். அஜீத் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டதாக சில வாரங்களுக்கு ஒரு டுபாக்கூர் தகவலை வெளியிட்டு, நாட்டில் பெரும் குழப்பத்தை விளைவித்தன சில கேரள ஊடகங்கள். இந்தநிலையில்தான் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து...

Read More

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாச...

<
‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு விழாவில், ரஜினி கமல் இளையராஜா மூவருக்கும் கூட சேர் மறுக்கப்பட்டு, நிற்க வைக்கப்பட்டார்கள். “அதெல்லாம் அந்த காலம்… அதுக்கென்ன இப்போ?” என்று மறக்கப் பழகிய ரஜினியும் கமலும், பழசை மறந்து முதல்வருடன் நட்பு கொண்டதுதான் நல்ல விஷயம். மீண்டும் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட விழாவில், முதல் ஆளாக கலந்து கொண்டார் ரஜினி. இப்படி கலையுலகத்தில் அரசியலும் கலக்கப்பட்டு வருவதால், சில நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ கூட சுற்று சூழல் பார்த்து செய்ய வேண்டியதாக இருக்கிறது. கமல் பிறந்த நாள் விவகாரமும் அப்படிதான் என்று சொல்ல முடியாது. முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்...

Read More

Search This Blog

Blog Archive

About