March 01, 2018
`நீங்க கண்ணடிக்கிற ஸ்டைலே தனிதான்!' - ஸ்பீச் தெரபி, ஞாபக மீட்புக்கு இடையே கலகலக்கும் விஜயகாந்த்
March 01, 2018<
அரசியல்ரீதியான அறிக்கைகளைத் தவறாமல் வெளியிட்டு வருகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' தைராய்டு உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில், பழைய நண்பர்களை சந்தித்துப் பேசி வருகிறார். இதுவும் சிகிச்சையின் ஓர் அங்கம்தான்' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள். பேருந்து கட்டண உயர்வாக இருந்தாலும் மாணவர்களை வதைக்கும் தேர்வுகளாக இருந்தாலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடம் இருந்து தவறாமல் அறிக்கை வந்துவிடுகிறது. தன்னை சந்திக்க வருகிறவர்களிடம், அரசியல் நடப்புகளைப் பற்றி விரிவாகப் பேசி வருகிறார். கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ' அரசியலில் ரஜினி, கமலைவிட நான் சீனியர் என நீங்கள் கூறியதாகப் படித்தேன். உண்மைதான்' எனக் கூறியபோது, பலமாக சிரித்தார் விஜயகாந்த்' எனப் பதிவு செய்திருந்தார் நடிகர் கமல்.இந்நிலையில், திரையுலகப் பிரமுகர்களுக்கு நேற்று விஜயகாந்திடம் இருந்து திடீர் அழைப்பு. இந்த சந்திப்பில்,...