­
05/16/18 - !...Payanam...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்...

<
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் ஸ்டிரைக் காரணாமாக தள்ளிப்போனது. ரஜினி படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை கபாலி ஏற்கனவே நிரூபித்து விட்டது.இந்நிலையில் இப்படத்திற்கு பெரும் சவாலாக ஹாலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷன்களை பெற்ற ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் ஜூன் 8 ல் 2300 தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற இப்படத்தை ஃபயோனா இயக்கியுள்ளார். இவர் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெர்க்கிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவராம்.இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் வெளியாகிறது. எனவே காலாவுடன் போட்டியில் இறங்கும் இந்த பிரம்மாண்ட படத்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.ஜெயிக்கப்பபோவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம். ...

Read More

அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெ...

<
அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.கடந்த சிலநாட்களுக்கு முன் தான் மராத்தியில் முதல் சீசன் தொடங்கியது. அடுத்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசன் டீசர் வெளியானது. கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.தமிழ் பிக்பாஸின் முதல் சீசனை தொடர்ந்து தெலுங்கிலும் நடத்தப்பட்டது. நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கியிருந்தார்.இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதமே தொடங்கவுள்ளதாம். நடிகர் நானி இதை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரமோ, போஸ்டருக்கான ஷூட்டிங் அவரை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம்.எனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாமளா, தேஜஸ்வி மடிவடா ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கான தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறதாம்....

Read More

Search This Blog

Blog Archive

About