November 21, 2017
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :-இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நடிகர் கார்த்தியை பற்றி பேசும் போது , கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும் , முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே...
November 21, 2017
மிஸ்கின் பேச்சு! புஸ்சுன்னு போச்சு! அப்செட்டாக்கிய ஆடியோ விழா
November 21, 2017மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேச...
<
மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேசுவார். அந்த கண்ணாடியும் அந்த பாடி லாங்குவேஜும்… ‘அப்பப்பா’ என்று ரசிக்கும்படி இருக்கும்.பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சீமத்துரை பட பாடல் வெளியீட்டு விழாவிலும் இந்த விஷயம் நடந்தது. விழாவுக்கு யார் யாரோ வந்திருந்தாலும் மிஷ்கினுக்காக காத்திருந்தது கூட்டம்.அந்தோ பரிதாபம்… ஒருவரையும் சீண்டாமல், யாரையும் பிடுங்கி வைக்காமல் டீசன்ட்டாக பேசிவிட்டு போனார் மனுஷன். (கொஞ்சம் அப்செட்தாங்க) இருந்தாலும் இந்த விழாவுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? இந்த இயக்குனரை பற்றிய தன் பார்வை என்ன என்பது பற்றியெல்லாம் அவர் பேசியது இன்ட்ரஸ்ட்டிங்…“பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு...
November 21, 2017
கைது செய்யப்படுவாரா கமல்? சாருஹாசன் என்ட்ரி!
November 21, 2017“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்பட...
<
“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்படி அதிரடியாக கருத்து சொன்னவரே சாருஹாசன்தான். கமலின் உடன் பிறந்த சகோதரன் வாயாலேயே இப்படியொரு கருத்து வந்தால், கமலை நம்பி எவன் கட்சியில் சேருவான்?இதெல்லாம் போன வாரம். இது இந்த வாரம். யெஸ்…. தன் தம்பிக்கு ஆதரவாக கையை முறுக்கிக் கொண்டு களத்தில் குதித்துவிட்டார் சாருஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார் கமல். அதில், குற்றவாளிகள் அரசாளக் கூடாது என்று கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைச்சர்கள் பலர் ஆங்காங்கே தங்களது விமர்சனங்களை கடுமையாக தெரிவித்து வருகிறார்கள். அதிலும் அமைச்சர் ஜெயக்குமார், ‘கமல் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டிருந்தால் அவர் மீது நடவடிக்கை பாயும்’ என்று கூறியிருக்கிறார். குணா கமல் என்றும் அவரை விமர்சித்திருக்கிறார்.நிலைமை இப்படியே தொடர்ந்தால்,...
November 21, 2017
உயிரினங்களில் சில வியப்பு…உங்களுக்கு தெரியுமா ?
November 21, 2017பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம். – சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது. – ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவ...
பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம். – சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது. – ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான். – மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம். – பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது. -ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. -கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு. – மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது. – முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது. – இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது. – கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது. – நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும். – வெட்டுக்கிளிக்கு காதுகள்...
November 21, 2017
நாண் ஸ்டிக்கில் தயாரான உணவைச் சாப்பிடாதீங்க!
November 21, 2017சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.தற்போது, நாண் ஸ்டிக் பாத்...
சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.தற்போது, நாண் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம்.ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன, நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும். பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும். அறிவாற்றல் குறைபாடுகள் தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம்...
November 21, 2017
பளிங்கு முகத்தில் பருக்களா? இந்த உணவை சாப்பிடாதீர்கள்
November 21, 2017பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன. என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பரு...
பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன. என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பருக்கள் உங்களை அசிங்கப்படுத்துகின்றது என்ற கவலையில் இருக்கும் நீங்கள் செயற்கை மருத்துகளை தவிர்த்து, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதால் பருக்கள் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பால் பொருட்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால் பருக்கள் அதிகம் வருகிறது. காபி சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக்கச் செய்வது தான் காப்பைன். இது சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும். மேலும் நிம்மதியான தூக்கத்தையும் இது கெடுத்து விடுவதால் பாதிப்படைந்த திசுக்களை சரிசெய்ய உடலுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே பருக்கள் வரத் தொடங்கினால், நன்றாக தூங்கத் தொடங்குங்கள். இது பருக்களின் வளர்ச்சியை இன்னும்...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)