May 10, 2018
கூகுள் வழங்கும் ஸ்பை வாய்ஸ் மெசெஞ்சர் டைப்பிலான கூகுள் டூப்ளக்ஸ்!!
May 10, 2018 ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.. அதன் நவீன வடிவமாக இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவ மனைகளில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரும் வசதியை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபிய அரசு, சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடி மகளாக அறிவித்த. ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்தில் செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் நிக் கெர்ரிட்சென் என்ற செய்தி வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில்...