October 22, 2016
கவிழ்ந்ததா... கரை சேர்ந்ததா? காகித கப்பல் விமர்சனம்
October 22, 2016 ஹீரோ அப்புக்குட்டி, புதுமுக நடிகை தில்லிஜா இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார், புரோட்டா முருகேசன் ஆகியோர் நடிக்க சிவராமன் இயக்கியிருக்கும் படம் “காகிதகப்பல்”. “தலை வணங்குறோம் தல” என்ற ஒற்றை டேக் லைனுடன் அஜித்தை கொண்டாடும் விளம்பரங்களுடன் திரைக்கு வந்திருக்கிறது. காகித கப்பல் கரை சேர்ந்ததா? பேப்பர் பொறுக்கியே வாழ்க்கையில் முன்னேறி, பின்னர் பேப்பர் தொழிலில் கோடிகளில் பிஸினஸ் செய்யும் பிஸினஸ்மேனாக வலம் வருகிறார் அப்புகுட்டி. அவரின் ஒரே ஆசை தன் அம்மாவிற்காக சொந்த வீடு வாங்குவதுதான், அந்த நேர்த்தில் தில்லிஜாவின் தந்தையை பெயிலில் எடுக்க 20 லட்சம் தேவைப்பட அப்புக்குட்டிக்கு தன் வீட்டை விற்க முயல்கிறார் தில்லிஜா. அவரிடம் 20 லட்சம் அட்வான்ஸ் தந்துவிடுகிறார் ஹீரோ அப்புக்குட்டி. சில பல களேபரங்களுக்கு பின்னர் அப்பா, அம்மாவின் மீது கோவப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறும் தில்லிஜாவிற்கு அடைக்கலம் தருகிறார் கருணை வள்ளல் அப்புகுட்டி. அடுத்து அதேதான். அப்புக்குட்டிக்கும் தில்லிஜாவிற்கும் காதல் ......