June 01, 2019
தேவி 2 கோடை விடுமுறையில் நல்ல பொழுதுபோக்கு. கொடுத்த காசுக்கு ஒர்த்
June 01, 2019 பேய் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கை இருப்பது வழக்கமான ஒன்று தான். அதே வேளையில் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வெற்றி பெறுமா என்பது மக்களிடத்தில் தான் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் விஜய்யின் தேவி படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக தேவி 2 படம் வெளியாகியுள்ளது.கதை பற்றிய அலசல்தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு.பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்.இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால்...