November 19, 2016
கடவுள் இருக்கான் குமாரு - விமர்சனம்
November 19, 2016 ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி! கதை என்கிற அழுத்தமான பில்லருக்காக எவ்வித சிரமமும் படவில்லை அவர். முகலிவாக்கம் பில்டிங்கை விட மோசமான அஸ்திவாரத்தின் மீது, கல்பாக்கம் அணு உலையை கட்டிய மாதிரி, காலியான கதைக்குள் ஜாலியான ஜோக்ஸ்களை அள்ளிப் போட்டு, தியேட்டரை எங்கேஜ் பண்ணியிருக்கிறார் ராஜேஷ். இனி ஜிவிபிரகாஷுக்கு கதை சொல்லக் கிளம்பும் கூட்டத்தில் ஜோக்ஸ் எழுத்தாளர்களும் இருந்தால், அது குமாரு தந்த கொலாப்ஸ் அன்றி வேறில்லை! கிறிஸ்துவ பெண்ணான ஆனந்தியை காதலிக்கும் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி அப்பாவின் மதம் மாற்றும் நோக்கம் பிடிக்காமல் அவரிடமிருந்து விலக, சுட சுட இன்னொரு பெண் ரெடி....