July 15, 2017
சிறையில் சசிகலாவுக்கு மட்டும் அல்ல இவருக்கும் சிறப்புக் கவனம்தான்! - அதிர்ச்சிதரும் ரிப்போர்ட்!
July 15, 2017ப ரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்க...
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்படுகிறது என்று பகீர் புகாரைக் கிளப்பினார் டி.ஐ.ஜி ரூபா.
போலீஸாருக்கு நெருக்கடி
இந்த நிலையில் ரூபாவுக்கு கர்நாடகா அரசின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிறையில் விசாரணை மேற்கொண்ட விவரங்களை மீடியாக்களிடம் ஏன் தெரிவித்தீர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் ஒரு சேர புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் கர்நாடகா அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, "இது முழுக்க, முழுக்க விதிமுறைகளுக்கு மாறானது. இந்தக் குற்றசாட்டைக் கூறும் முன்பு ரூபா, தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் இது பற்றிப் பேசியிருக்க வேண்டும். மீடியாக்களிடம் தகவல்களை ரூபா வெளியிட்டதால், போலீஸ் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறி இருக்கிறார்.
எனக்கு மட்டும் விதிமுறையா?
முதல்வரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டி.ஐ.ஜி ரூபா, "உண்மையில் நான் மீடியாக்களிடம் பேசவில்லை. எனது விசாரணையின் விவரங்களை டி.ஜி தான் கொடுத்திருக்கிறார். விதிமுறைகள் என்பது எனக்கு மட்டும் விதிக்கப்பட்டது அல்ல. எல்லோருக்கும் அந்த விதிமுறைகள் பொருந்தும். இது குறித்த அரசின் எந்த வித விசாரணைக்கும் நான் சம்மதம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தில் என்னை மட்டும் குறிவைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
ரூபா-சத்யா நாராயண ராவ்
சிறையில் ஆய்வு நடத்தியது குறித்த அறிக்கையை உள்துறை மற்றும் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் ஆகியோரிடம் ரூபா அறிக்கை அளித்திருக்கிறார். அந்த அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்குச் சிறை விதிமுறைகளை மீறி தனியாக சமைத்து உணவு வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்
சிறைத்துறை டிஐஜிக்கு ரூபா தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா விவகாரம் மட்டும் இன்றி மேலும் பல அதிர்ச்சித் தகவல்களும் இடம் சசிகலாபெற்றுள்ளன. போலி ஸ்டாம்ப் பேப்பர் வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்கிக்கும் வி.ஐ.பி அந்தஸ்துடன் தனி கவனிப்பு செய்யப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. சிறைத் துறையில் உள்ள மருத்துவ அலுவலர்கள், கைதிகளுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்வதாகவும் ரூபா கூறி இருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சத்யா நாராயண ராவ், சிறைத் துறையில் உள்ள சட்ட நடைமுறைகள் ரூபாவுக்குத் தெரியவில்லை. சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பது புதிதாக அவர் கண்டுபிடித்த ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பெறுகின்றனர். அதைத் தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.
சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் பற்றி புகார் சொன்னவரையே கார்னர் செய்வது கர்நாடகா மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தினந்தோறும் சிறையில் கஞ்சா புழங்குகிறது என்று சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவே கூறி இருப்பதும் சிறை கண்காணிப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.