ஜல்லிக்கட்டுல கெத்து ரெண்டு பேர்தான்! யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை ...

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை வெற்றிகரமாக அடக்கி அதை வென்றுவிட்டால் ஆயிரம் மகுடம் தன் தலையில் ஏறுவதுபோல் நினைக்கும் வீரன். மற்றொருவர் வீரன் என்று எவரும் இல்லாமல் தன் காளை வென்றால் களத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முன்பு மீசையை முறுக்கிவிட்டு நடந்து செல்லும் மாட்டின் சொந்தக்காரர்.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?

மாட்டுப்பொங்கல்

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான மாட்டுப் பொங்கலன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.  இதை ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிட்டு அழைத்து வந்தனர் தமிழர்கள். குறிப்பிட்ட அந்த நாளில் 'வாடிவாசல்' என்று ஓர் இடத்தை அமைத்து வீரர்கள் விளையாட இடம் ஒதுக்கித் திருவிழா போல் கொண்டாடும் நாள்தான் ஜல்லிக்கட்டு. இதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். முன்பு இதை 'சல்லிக்கட்டு' என்று அழைத்து வந்தனர் காலப்போக்கில் அது ஜல்லிக்கட்டு என்றாகிவிட்டது.

'சல்லி' என்றால் வெள்ளி மற்றும் தங்கக்காசுகளைக் குறிக்கும். 'கட்டு' என்றால் அதை மாட்டின் கொம்பில் கட்டுவதைக் குறிக்கும். மாட்டின் கொம்பில் இருக்கும்  கட்டப்பட்ட அந்தக் காசுகளை எவன் ஒருவன் காளையை அடக்கிக் காசினை அவிழ்த்துவிடுகிறானோ அவனுக்கு வெற்றியுடன் சேர்ந்து அந்தக் காசுகளும் பரிசாகக் கிடைக்கும்.  பட்டிதொட்டியெங்கும் காளையை அடக்கிய வீரனின் பெயர் பெருமையாகப் பேசப்படும். இவ்விளையாட்டு தமிழகம் முழுவதும் பலவிதமாக விளையாடப்பட்டு வருகிறது.

ஆதரிப்பதன் காரணம்?

தமிழ்நாட்டின் பாரம்பரியம், அடையாளம் என்று கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டானது சங்க காலத்திலிருந்தே பின்பற்றி வரப்படும் வீர விளையாட்டாகும். காளைமாட்டை அடக்குவது போல் பொறிக்கப்பட்ட 1,500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்வெட்டு மதுரை அருங்காட்சியகத்தில் இன்றும் இருக்கிறது. முல்லை நிலத்தின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. காலப்போக்கில் வீர விளையாட்டாக பல கிராமங்களில் கொடிகட்டிப் பறந்து வந்தது. அதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்கள் ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் ஊர்களாகத் திகழ்ந்து வருகின்றன.

இளைஞர்கள் பட்டாளம் :

ஜல்லிக்கட்டு நடந்தே தீர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைப்பதில் முன்னிலை வகிப்பது இளைஞர் பட்டாளம்தான். சமீபத்தில் சோசியல் மீடியா வாயிலாக ஏற்பட்ட விழிப்பு உணர்வின் பலனாக, சென்னை மெரினா கடற்கரையில் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களால் அந்தப் பகுதியே மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தது. ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் பலருக்கும் தெரியப்படுத்த சோசியல் மீடியாவில் 'ஹேஸ்டேக்' ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாகத் தகவல்களைப் பகிர்ந்ததில் நடந்த நிகழ்வுதான் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு விழிப்பு உணர்வு பிரசாரம். இதில் கலந்துகொண்டோரில் பலர் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தனர். அதேபோல் இடைவிடாது வீடியோ, மீம்ஸ், ஹேஸ்டேக் என சோசியல் மீடியா முழுவதுமாகக் களைகட்டி வருகிறது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக.. புத்தாண்டு தினம் அன்று சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் 12 மணி நெருங்கியதும் 'ஹேப்பி நியூ இயர்' என்பதற்குப் பதில் 'வீ வான்ட் ஜல்லிக்கட்டு' என்ற கோஷத்தை எழுப்பியதே இவர்களின் தமிழ் உணர்வுக்கான மிகப் பெரிய அடையாளமாகும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About