டி.வி ஷோக்களில் அதெல்லாம் உண்மை கிடையாது! நடிகர் பாலாஜி அதிர்ச்சி தகவல்

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன...

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன்று ஒளிபரப்புவார்களே அடேயப்பா.

சண்டை, மோதல், அழுகை, விலகிப்போவது என ஏதாவது சீரியஸ் ஆன சீன்களை ப்ரோமோவாக போட்டு பலரின் கவனத்தை திருப்பிவிடுவார்கள்.

ஆனால் அதில் சில உண்மையல்ல என அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சில மாதங்களுக்கும் முன் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த சிம்புவுக்கும், அதில் நடனமாடிய டிங்குவுக்கும் சண்டை வருவதுபோல காண்பிக்கபட்டு பின் அது உண்மையல்ல என சொல்லப்பட்டது.

அதே நிகழ்ச்சியில் தற்போது நடக்கும் சீசனில் காமெடி நடிகராக இருந்த தாடி பாலாஜியும் அவரது மனைவியும் ரியல் ஜோடியாக நடனமாடுகிறார்கள்.

இதில் ஒரு எபிசோடில் தாடி பாலாஜி நான் என மனைவியை அடித்திருக்கிறேன், கடுமையாக திட்டியிருக்குகிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன் என கூறினார்.

அதற்கு அவர் மனைவி டி.வியில் எல்லோரையும் சிரிக்கவைத்தவர் என்னை மட்டும் அழவைத்திருக்கிறார் என் சொன்னார். இக்காட்சி மிகவும் பரபரப்பானது. பாலாஜி இப்படி கொடூரமானவரா என ஒரு தோற்றம் இருந்தது.

தற்போது பாலாஜி இதற்கு மாறாக சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அவர் சொல்லும்போது ;-

நான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன், அவரும் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டார்.

அவரை எப்படி நான் அடித்து, கொடுமைப்படுத்துவது. நான் என் மகள், மனைவியுடன் சந்தோசமாக இருக்கிறோம். டிவியில் நடந்தது ஒரு சின்ன கலாட்டா, அவ்வோளோ தான். ரியாலிட்டி ஷோ என்றால் அதெல்லாம் சகஜம் தானே என கூறியுள்ளார்.

இதனால் மீண்டும் இப்படி மக்களை சீரியஸ் ஆக்கும் டிவி நிகழ்ச்சிகளின் ப்ரமோக்கள் பின்னல் மாயை மட்டுமே என நிரூபணம் ஆகியுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About