முட்டைக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன சம்பந்தம்...?

வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழி...

வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.

அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.

முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமமாக சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive