திமுக தேர்தல் பிரச்சாரத்தில் சீயான் விக்ரம்!

யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எ...

யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எந்தெந்த சாமிகளோ யூஸ் பண்ணுவதுதான் விக்ரமுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது அல்லவா? நடிகரும் மருத்துவருமான சரவணன்தான் இந்த தொகுதியின் திமுக வேட்பாளர். திருப்பரங்குன்றம், கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று. முருகனுக்கும் எலக்ஷனுக்கும் ரூட் போட்ட சரவணன், அப்படியே அந்த ரூட்டை கண்டபடி இழுத்து கந்தசாமி படம் வரைக்கும் வந்துவிட்டார்.

தீமைகளை தட்டிக் கேட்கிற முருகனின் வாகனமான சேவல், அந்த சேவல் கெட்டப்பில் வந்து எதிரிகளை பந்தாடிய விக்ரம், என்று கோர்த்து வாங்கி பிரச்சாரத்திற்குள் நுழைத்துவிட்டார். எப்படி தெரியுமா? ‘கந்தசாமி’ படத்தில் வரும் சீயான் விக்ரம் கெட்டப்பில், விக்ரம் சாயலிலேயே ஒருவரை கொண்டு வந்து அவரை பிரச்சார வேனில் ஏற்றி தெரு தெருவாக சுற்ற விடுகிறார் சரவணன்.

மக்கள் அனைவரும் விக்ரம் வந்துட்டாரு விக்ரம் வந்துட்டாரு என்று ஆர்வத்தில் கூச்சலிட, அந்த கூச்சல் சென்னை வரைக்கும் கேட்டு விக்ரமை அதிர வைத்திருப்பதுதான் செம ட்விஸ்ட்! விளக்கேத்தணும்னு முடிவாயிருச்சு. அது வௌக்கெண்ணையா இருந்தா என்ன? வேப்பெண்ணையா இருந்தா என்ன?

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog