அனுபவம்
நிகழ்வுகள்
அங்கும் தமிழ் இங்கும் தமிழ்! தமிழ்குடிதாங்கி ஆன சிவகார்த்திகேயன்!
November 02, 2016
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
இந்த கட்ஸ் நம்ம ஊரு ஹீரோக்களுக்கு இருக்கா? என்று கவலைப்பட்ட தமிழர்களுக்கு, அந்த ஆறுதலை அள்ளி அள்ளி தந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இனி அவரை தமிழ் குடிமகன் என்றோ, தமிழ் குடிதாங்கி என்றோ அழைத்தால் திராவிடப் புலிகளே கூட கை தட்டி பரவசப்படுவார்கள்.
சில தினங்களுக்கு முன் ஐதரபாத்தில் நடந்த ‘ரெமோ’ தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கால்வாசி தமிழிலேயே பேசி, தன் தாய் மொழியின் அருமையை விட்டுக் கொடுக்காமல் இருந்தார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் அவர் பேசிய தமிழை புரிந்து கொண்டு ரசித்தது கூட்டம். ஆமாம்… அங்கு அவர் என்னதான் பேசினார்? அது ஒரு முழ நீளத்துக்கு இருந்தாலும் முக்கியமாய் ஒன்று!
‘கீர்த்தி சுரேஷ் இப்போ தமிழ்நாட்ல டாப் இடத்துல இருக்காங்க. ரொம்ப பிசியா இருக்காங்க. நம்ம கூட நடிச்சவங்க நெக்ஸ்ட் லெவலுக்கு போறதுதான் எனக்கு சந்தோஷம். அந்த வகையில் பார்த்தால், அவங்களோ சக்சஸ் என்னோட சக்சஸ்” என்றார்.
என்னவோ புரியுது… ஆனாலும் புரியல!

0 comments