பகையில்லை பராபரமே! நாசர் பேமிலிக்கு தாணு சப்போர்ட்!

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்...

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக
களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத பிளாஷ்பேக்தான்! ‘தேர்தல் நேரத்து கோபம், ரிசல்டோடு போச்சு’ என்பதைப் போல இப்போது ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது.

யெஸ்… நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் லுத்புதீன் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பறந்து செல்ல வா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் கலைப்புலி தாணு. சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இப்பவே ரெடியாம். தனபால் பத்மநாபன் இயக்கத்தில், லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கப்பூர் நடிகை நரேலி நடித்திருக்கும் இப்படம் டிசம்பர் 9 ந் தேதி திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம், காதலும் மோதலும் சேர்ந்த கமர்ஷியல் கலவை.

ஏ.ஆர்.ரஹ்மானால் அதிகம் புகழப்பட்ட ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். (நடுவுல எங்க சார் போனீங்க?) சிங்கப்பூர் தமிழரான அருமைச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்தை பார்த்தவுடனேயே வெற்றிலை பாக்கு மாற்றிவிட்டாராம் தாணு. பொதுவாக தாணுவின் தற்போதைய ராசிப்படி, மலேசியா சிங்கப்பூர் திசைதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது. கபாலி வசூல்தான் கடைகோடி ஜனம் வரைக்கும் தெரியுமே? அதே சென்ட்டிமென்ட் தாணுவை மீண்டும் அரவணைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது ‘பறந்து செல்ல வா!’

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog