இன்டர்நெட்லயே வரட்டும்! இளையராஜா ஆசை!

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன் பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்த...

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன்
பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்து நிமிட கிளிப்பிங்ஸ். தட்டுமுட்டு சாமான்களை உருட்டுவதையே இசை என்று நம்ப ஆரம்பித்துவிட்டது சிறிசுகளின் உலகம். ஆனால் இசை என்பது மனதை வருடும் மற்றொரு தவம் என்பதை மறுபடி மறுபடி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார் இளையராஜா! உலகத்தின் எந்தெந்த மூலையில் இருந்தோ, இந்த இசை விருந்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பேர்களில் ஜுலியன் கரிகாலனும் ஒருவர்.

மதுரையை சொந்த ஊராக கொண்ட இந்த இளைஞர் இப்போது ஆஸ்திரேலியா சிட்டிசன். 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசின் சிறைத்துறை டாகுமென்ட்ரி பிரிவில் வேலை செய்துவரும் இவருக்கு, லவ் அண்ட் லவ் ஒன்லி என்கிற படம் முதல் படம்! அவரே தயாரித்து இயக்கியிருக்கும் இந்த ஆங்கிலப்படத்தில் இந்திய பையன் ஒருவனும் ஆஸ்திரேலிய பெண் ஒருத்தியும் காதலிப்பதாக போகிறது கதை. நம்ம தமிழ்நாட்டு கல்ச்சரை சொல்ற மாதிரி இந்த படத்தை எடுத்திருக்கேன். இந்திய பையனுக்கும், ஆஸ்திரேலியா பெண்ணுக்கும் இடையே வர்ற காதல், அதையொட்டிய சம்பவங்கள்னு படம் டிராவல் ஆகுது.

படத்தை எடுத்து முடிச்சுட்டு நான் செஞ்ச முதல் வேலை, சென்னைக்கு வந்து ராஜா சாரை மீட் பண்ணியதுதான். இந்த படத்தை முழுசாக பார்த்தவர், இசையமைக்கிறேன்னு ஒப்புக் கொண்டார். ஐந்தே நாளில் ஒரு பாடலையும் ரீரெக்கார்டிங்கையும் முடிச்சு கொடுத்துட்டார். முதல்ல இந்த படத்தை இணையதளத்தில் மட்டும் ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்ச எனக்கு ராஜா சார் மியூசிக் அமைஞ்சு பின்னாடி, தியேட்டர்லேயும் ரிலீஸ் பண்ணலாம்னு தோணுச்சு. ஆனால், ராஜா சார்தான் இணையதளத்தில் மட்டும் ரிலீஸ் பண்ணு. அதுதான் இளைஞர்களை போய் அதிகம் சேரும்னு சொன்னதால், இப்போ இணையதளத்தில் மட்டும் வெளியிடலாம்னு இருக்கேன் என்றார் ஜுலியன் கரிகாலன்.

படத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். எமியெல்லாம் என்ன முகம்! நம்ம ஜார்ஜியாவை உடைச்சு ஒரு டஜன் எமி செய்யலாம்!

அய்யா தமிழ்ப்பட இயக்குனர்களே… அட்ரசு வேணுங்களா?

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About