அனுபவம்
நிகழ்வுகள்
”கண்ணா...இது வெறும் ட்ரெய்லர்தான்!” - மோடி Next!மெயின் பிக்சர் எப்படியோ?
November 22, 2016
"பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது கறுப்புப் பண ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு ஆரம்பப் புள்ளியே, அடுத்தகட்டமாக இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. கறுப்புப் பணத்துக்கு எதிராக இன்னும் அடர்ந்த நீண்ட நெடும் போருக்காக, அரசு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறது" என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையிலான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மோடியின் இந்த நடவடிக்கையை அநியாயங்களுக்கு எதிரான அறப்போர் என அவர்கள் குறிப்பிட்டனர். கூட்டத்தினிடையே பேசிய மோடி, "கறுப்புப் பணம், கள்ள நோட்டு மற்றும் லஞ்ச ஊழல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர், இதற்குத் தீர்வு காண்பதற்காக அரசு பெரிதும் பாடுபட்டுவருகிறது. நாம் மக்களுக்காகத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறோம், நமக்குத் தெரிந்தவர்கள் உறவினர்களுக்காக அல்ல. எதிர்கட்சிக்காரர்கள் இதற்கு எதிராகக் குரல்கொடுப்பது கறுப்புப் பணத்துக்குத் துணை போவது போலாகும்” என்றார்.
“பணமுடக்கம் மட்டுமல்லாமல், கறுப்பு பணப் பிரச்சனையை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு மற்றும் வருமான விவரங்களைச் சமர்ப்பிப்பது போன்றவற்றைக் கட்டாயமாக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
பிரதமரின் இந்தச் செயல்பாட்டைப் பாராட்டிப் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு,”70 ஆண்டு காலமாக மக்கள் துன்பப்பட்டது போதும். இனியாவது அவர்களின் வாழ்க்கை விடியட்டும். அதற்காக பிரதமர் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தாமலாவது இருக்கலாம். மக்களின் பக்கமா, கறுப்பு பணத்தின் பக்கமா என்பதை அரசியல் கட்சிகள்தான் முடிவு செய்யவேண்டும். மற்றபடி கடந்த 12 நாட்களாக இந்தத் திட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் பெரும் மாற்றம் ஒன்று நிகழும்போது சிறுவலி ஏற்படத்தான் செய்யும்” என்றார்.
கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “பிரதமரின் இந்த நடவடிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று, இதனால் பொருளாதாரம் பல வகையில் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில்,”மக்களின் நன்மைக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும்தான் இந்தத் திட்டம்” எனக் கூறினார்.பிரதமரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ட்ரெயிலரே இப்படின்னா! மெயின் பிக்சர் எப்படியோ?

0 comments