அனுபவம்
நிகழ்வுகள்
''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
December 01, 2016
தமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும்
தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பல அதிகாரிகள் செய்யும் வேலைகளை, தனி ஆளாக செய்து கொண்டிருக்கிறார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான். இவர்தான் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் நபர்.
வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் பதிவேற்றி வருவதால், இவருக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ். "தமிழ்நாடு வெதர்மேனே சொல்லிட்டாருப்பா.. கண்டிப்பா மழை வரும், புயல் வரும்" என மக்கள் சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார் பிரதீப் ஜான். கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்யும் என தமிழக அரசே எதிர்பார்க்காத நிலையில், 'மிக அதிகளவு மழை பெய்யும்' என கூறியவர் பிரதீப் ஜான். இவரின் துல்லியமான மழை முன்னறிவிப்புகளை தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டியுள்ளார்.
கடந்த வருடம் ஏகத்திற்கு கொட்டித்தீர்த்த மழை, இந்த வருடம் போதிய அளவு பெய்யாமல் முரண்டு பிடிக்கிறது. மழைக்காக தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?' என பிரதீப் ஜானிடம் கேட்டோம், "சென்னையைப் பொருத்தவரை இதுவரை 30 முதல் 40 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற பகுதிகளைவிட சென்னையில் மழை விகிதம் அதிகமே. 'நாடா புயல்' வலுவிழந்த நிலையில் நாளை காலை (2.12.2016) கடலுர் மாவட்டம் பரங்கிப்பேட்டை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும்.
50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று வீசக்கூடும். இன்று பெய்தது போல நாளையும் மிதமான மழையே பெய்யும். டிசம்பர் 3-ம் தேதிவரை தமிழகத்தில் மழைபெய்யும். அதன்பிறகு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அடுத்ததாக ஒரு புயல் உருவாகும். அந்தப் புயல் தமிழகத்தை விட்டு விலகிப் போவது போல தெரிகிறது. ஒருவேளை மீண்டும் உருவாகும் புயல் தமிழகம் நோக்கி வந்தால், நிச்சயம் மழை பெய்யும். கடந்த 200 வருடத்தில் இந்த ஆண்டுதான் தமிழகத்தில் குறைவான மழை பெய்திருக்கிறது. சென்னைக்கு இந்த ஆண்டுதான் இரண்டாவது குறைந்த மழை.. வழக்கமாகப் பெய்யும் மழையில் இந்த ஆண்டு 10-20 சதவீத மழையே பெய்திருக்கிறது. அக்டோபரில் வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது பர்மா நோக்கி சென்று விட்டது. நவம்பரில் எந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நமக்கு வரவில்லை. தற்போது வந்துள்ள 'நாடா புயலும்' மழையில்லா புயலாகி விட்டது. இதன் காரணமாகவே இந்த வருடம் மழையும் குறைந்திருக்கிறது'' என்றார்.
நாடா புயலால் என்ன பாதிப்பு
''தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள நாடா புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவிழந்து, நாளை அதிகாலை கடலூர், வேதாரண்யம் பகுதி இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது புதுச்சேரி அருகே 210 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை நீடிக்கும்'' என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழையை எதிர்பார்க்கிறோம்..

0 comments