மாட்டு சிறுநீரில் தங்கம்... விவசாயக் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு!

காரி மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட கட்டித்தங்கம், இது செவலை மாட்டு சிறுநீரில் உற்பத்தி செய்த சொக்கதங்கம் என்பது போன்ற வாசகங்கள் இனி வரும...

காரி மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட கட்டித்தங்கம், இது செவலை மாட்டு சிறுநீரில் உற்பத்தி செய்த சொக்கதங்கம் என்பது போன்ற வாசகங்கள் இனி வரும் காலங்களில் நகைக்கடை
விளம்பரங்களில் காணப்பட்டாலும் வியப்பில்லை. ஆம், குஜராத்தில் உள்ள ஜுனாகத் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கிர் மாடுகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்தபோது, அதில் தங்கத்தின் படிமம் இருப்பதையும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து 400 கிர் மாடுகளின் சிறுநீரை எடுத்து தனித்தனியாக சோதனை செய்து பார்த்த பொழுது அத்தனை மாடுகளின் சிறுநீரிலும் ஒன்று போலவே தங்கத்தின் துகள்கள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். சரி...மாடுகளின் சிறுநீரில் தங்கத்தின் துகள்கள் இருப்பது கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்தது சிறுநீரை காய்ச்சி சுண்ட வைத்து மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி அச்சில் ஊற்றி, வெல்லக்கட்டிகள் தயாரிப்பது போல தங்கக்கட்டிகள் தயாரிக்க போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாடுகளின் சிறுநீரில் தங்கம் இருப்பது பற்றி டாக்டர் வடிவேலிடம் பேசினோம். "கிர் மாடுகளின் சிறுநீரில் தங்கத்தின் கூறுகள் இருப்பதாக குஜராத் ஜுன்னாகத் விவசாயக்கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளது உண்மைதான். அதை வைத்து அதீத கற்பனையெல்லாம் செய்யத் தேவையில்லை. ஆனால், எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இப்போதைக்கு சிறுநீரில் தங்கத்தின் துகள்கள் இருக்கிறது என்பதுடன் அந்த மாணவர்கள் அந்த ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டார்கள்.

அதற்கான தொடர் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் நடந்து, சிறுநீரில் இருந்து தங்கம் எடுக்கும் காலம் வரலாம். விரைவான விஞ்ஞான வளர்ச்சியில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இளமையுடனும், மினுமினுப்புடனும் தேகம் இருக்கவேண்டும் என்பதற்காக வசதி படைத்தவர்கள் சிலர் தங்கபஷ்பம் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், அந்த தங்க பஷ்பத்தின் மூலக்கூறுகள் மாடுகளின் சிறுநீரில் உண்டு. அதை நேரடியாக சாப்பிட முடியாது. அதனால் சிறுநீரை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் அர்க், பஞ்சகவ்யா, அமிர்த சஞ்சீவி போன்ற திரவப்பொருட்களாக மேம்படுத்தி அதை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடுவதன் மூலம் தங்க பஷ்பம் சாப்பிடும் பலனை மிக குறைந்த செலவில் பெறமுடியும் என்பதுதான் உண்மை" என்றார்.


  அர்க், அமிர்த சஞ்சீவி மற்றும் பஞ்சகவ்யா குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கொடுமுடி டாக்டர் நடராஜன் பேசும்போது, "நாட்டு மாடுகளின் சிறுநீரில் மட்டும்தான் தங்கபஷ்பத்தின் மூலக்கூறுகள் இருக்கிறது. கலப்பின பசு மாட்டின் சிறுநீரில் அறவே இல்லை என்பது ஜூனாகத் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. குஜாராத் மாநிலத்தின் நாட்டு மாட்டு இனமான ‘‘கிர்’ ரக பசுமாடுகளின் சிறுநீரை சேகரித்துதான் அந்த மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டனர் என்பதை கேள்விப்பட்டேன். அங்கு கிர் இனம் நாட்டு பசு என்றால், காங்கேயம், உம்பளாச்சேரி, புளிகுளம், ஆலம்பாடி, செம்மறை, பர்கூர் என்று தமிழ்நாட்டு இன பசுக்களிலும் தங்கத்தின் மூலக்கூறுகள் கண்டிப்பாக இருக்கும். நாட்டு பசுக்களின் சிறுநீரை மட்டும் மூலப்பொருளாக கொண்டு, அதை கொதிக்கவைத்து வெளியேறும் ஆவி குளிரும்போது சேகரிக்கப்படும் பன்னீர் போல காட்சி அளிக்கும் திரவம் தான் அர்க். நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் சிறுநீர் உள்ளிட்ட ஐந்து பொருட்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் திரவம் தான் அமிர்த சஞ்சீவி" என்றார்.
எதிர்காலத்தில் நாட்டு மாடு வைத்திருப்பவர்கள் எல்லோரும் நகைக்கடை ஆரம்பிக்கும் சூழலும் வரலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog