வனமகன்- மண்ணின் மகன் தான்- திரைவிமர்சனம்

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்ய...

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சமீபத்தில் பெரும் ஹிட் கொடுத்தவர்.

இருவரின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் வனமகன் வெற்றிப்படமாக இருவருக்கும் கைகொடுக்குமா என பார்ப்போம். வாருங்கள் வனத்திற்குள் செல்வோம்.

கதைக்களம்

அந்தமான் தீவுகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ஜெயம் ரவி கதையின் நாயகன். இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது.

பெரிய தொழிலதிபரின் மகளாக வரும் ஹீரோயின் சாயிஷா தன் அப்பாவின் நண்பரான பிரகாஷ் ராஜின் பராமரிப்பில் வாழ்கிறார். தமிழுக்கு புதிது என்றாலும் கொஞ்சம் கிளாமர், கூடுதல் நடிப்பு என அசத்தியிருக்கிறார். தன் நண்பர்களுடன் அந்தமான் சுற்றுலா செல்லும் போது அங்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.

இதில் எப்படியோ ஜெயம் ரவி மாட்ட இவரை சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். பின் ஜெயம் ரவியின் விஸ்வரூபம் வெளிப்பட ஒரே அமர்க்களம் தான்.

காட்டுவாசியான அவரை எப்படியோ அடக்கி சாயிஷா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். பின் ஹீரோயினுக்கு தெரியாமல் ரகசிய நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட அங்கு நடப்பதே வேறு.

இந்த கலவரத்தில் ஜெயம் ரவி போலிஸ் வலையில் சிக்குகிறார். அவரை போலிஸ் கைப்பற்ற காரணம் என்ன, ழங்குடி இன மக்களின் நிலை என்னானது , ஹீரோ சாரா என்ன ஆனார், சாயிஷாவுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை யார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவியின் நடிப்பு வனமகனாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். கண்கள் மட்டுமல்ல, உடல் மொழியில் அவர் செய்யும் அசைவுகள் காட்டுவாசியென பிரதிபலிக்கிறது. கதைக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.

ஹீரோவை கண்டாலே அலறி ஓடும் ஹீரோயின் ஒரு கட்டத்தில் வாசி வாசியென ஜெயம் ரவியை சுற்றுகிறார். கதை முழுக்க இவரும் பயணம் செய்கிறார். ஒப்பனிங் முதல் எண்டிங் வரை இவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

கும்கி, கடம்பன் என காடுகளை சார்ந்த படங்கள் ஏற்கனவே வந்தாலும் இதில் வித்தியாசத்தை காட்டி தனித்துவம் பெறுகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் மீதான நம்பிக்கையை தளரவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.

காட்டில் தொடங்கி நகரம் சென்று மீண்டும் வனத்தை நோக்கி படை எடுத்து மெசேஜ் சொல்கிறார். காமெடியான தம்பி ராமையா அவருடைய ஸ்டைலை அப்படியே காட்டியிருக்கிறார். இவரும் ஹீரோயினும் சேர்ந்து காமெடி செய்கிறார்கள். ஆனாலும் சில இடங்களில் ரவியால் காமெடிகள் உண்டாகிறது.

படத்தின் வில்லன் யார் என்பது கடைசியில் தான் தெரியும். பிரகாஷ் ராஜ் சில இடங்களில் வந்தாலும் தான் சீனியர் என்பதை நடிப்பில் காட்டியிருக்கிறார்.

ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்த வருண் இந்த படத்தில் ஒரு செகண்ட் ஹீரோ போல. ஆரம்பத்தில் இவர் தான் வில்லனோ என தோன்றும்.

கிளாப்ஸ்

இயக்குனர் விஜய் கதையை கொண்டு சென்றவிதம், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்.

கடைசி வரை வனமகனாகவே வாழ்ந்த ஜெயம் ரவியின் நடிப்பு.

படம் ரிலீஸ்க்கு முன்பே அதிக வாய்ப்புகளை அள்ளிய ஹீரோயின் பற்றி இனி என்ன சொல்ல.

பின்னணி இசையை பன்னீர் போல சரியாக தெளித்திருக்கிறார் ஹாரிஷ் ஜெயராஜ்.

பல்பஸ்

ஒரு இடத்தில் ஹீரோ காட்சியில் லாஜிக் இடிக்கிறது. உங்களுக்கே அது தெரியும்.

கதையை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் முடித்திருக்கலாமே என தோன்றுகிறது.

ஹாரிஷ் ஜெயராஜ் மீதான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.

மொத்தத்தில் வனமகன் மண்ணின் மகன் தான். அனைவரும் பார்க்கலாம்.

மேலும் பல...

1 comments

  1. பர்மா பஜாரில் வாங்கிய சைனா புலியை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள் இந்த படத்தை பார்த்து தலை வலி வந்தது தான் மிச்சம் நல்ல நடிகரின் எதிர்காலம் எண்ணெய் தீர்ந்த அகல் விளக்கை போல் காட்சி அளிக்கிறது நல்ல இயக்குனர்கள் அவரை காப்பாற்றுவார்களாக !!!!

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About