'செல்'லைக் கண்டறிந்த ராபர்ட் ஹூக் பிறந்த தினம் இன்று

'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வர...

'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வரலாறு இவரை புதுமைப்புலி என்றே பதிந்து வைத்துள்ளது. உலகின் 100 சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவர் பத்தாவது இடத்தில் இருந்தபோதும் என்னவோ அறிவியல் உலகில் மட்டுமே அறியப்பட்டவராக இருக்கிறார். சரி இவரைப்பற்றி என்ன என்கிறீர்களா. 1635-ம் ஆண்டின் ஜூலை 28-ம் நாள்தான் இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் எனும் பகுதியில் ஹூக் பிறந்தார். அவருடைய பிறந்த நாள் இன்று. சரி என்ன சாதித்தார் என்கிறீர்களா. இதோ சுருக்கமாகவே தருகிறோம். ஆனால், அதுவே நீள்கிறது பாருங்கள்.

இவர் கண்டறிந்த நுண்ணோக்கியின் மூலம் 'செல்' என்ற அமைப்பைக் கண்டறிந்து சொன்னவரே இவர்தான். ஒவ்வொரு பொருளும் செல்லால் ஆனது என்பதை அதன்பிறகே உலகம் அறிந்துகொண்டது. இவரின் இந்த ஆய்வுக்குப் பின்னர்தான் உடலியல் வல்லுநர்களின் செல்கள் குறித்த ஆய்வுகள், மருத்துவ வளர்ச்சி போன்றவை வேகமெடுக்க ஆரம்பித்தன. முதல் கணிதக் கருவி, கிரிகோரிய தொலைநோக்கி, ரிஃப்ளெக்டிங் டெலஸ்கோப் போன்றவை இவரால் கண்டுபிடிக்கப்பட்டு கணிதம், வானியல், மருத்துவம் போன்றவை பின்னாளில் வளர்ச்சி பெற்றன.

இவருடைய 'மைக்ரோஸ்கிராவியா' நூல் செல்களைப் பற்றிக் கூறும் மருத்துவ வேதம் என்றே சொல்லப்படுகிறது. செவ்வாய், வியாழன் உள்ளிட்ட பல கோள்களின் செயல்பாடுகளைக் குறித்து, இவர் செய்த ஆய்வுகள்தான் வானியலில் பெரும் திருப்புமுனையை உருவாக்கியது. மோட்டார் வாகனப் பாகங்கள், கடிகாரத்தின் பேலன்ஸ் வீல் ஸ்பிரிங் கன்ட்ரோல், கேமரா பாகங்கள், காற்றடிக்கும் பம்ப் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த அதிசய அறிவியலாளர் இவர். இதனாலே அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த புலி எனப் போற்றப்பட்டார். இயற்பியலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றாலும் உயிரியியலாளர், வேதியியல் அறிஞர், புவியியலாளர், கட்டடக்கலை நிபுணர், வானவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என இவரின் பன்முக சாதனைகள் நீளமானவை. மனித குல வரலாற்றில் பல முன்னேற்றங்களை உண்டாக்க பாடுபட்ட ராபர்ட் ஹூக் அவர்களின் பிறந்த தினம் இன்று.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About