கைது செய்யப்படுவாரா கமல்? சாருஹாசன் என்ட்ரி!

“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்பட...

“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்படி அதிரடியாக கருத்து சொன்னவரே சாருஹாசன்தான். கமலின் உடன் பிறந்த சகோதரன் வாயாலேயே இப்படியொரு கருத்து வந்தால், கமலை நம்பி எவன் கட்சியில் சேருவான்?

இதெல்லாம் போன வாரம். இது இந்த வாரம். யெஸ்…. தன் தம்பிக்கு ஆதரவாக கையை முறுக்கிக் கொண்டு களத்தில் குதித்துவிட்டார் சாருஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார் கமல். அதில், குற்றவாளிகள் அரசாளக் கூடாது என்று கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைச்சர்கள் பலர் ஆங்காங்கே தங்களது விமர்சனங்களை கடுமையாக தெரிவித்து வருகிறார்கள். அதிலும் அமைச்சர் ஜெயக்குமார், ‘கமல் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டிருந்தால் அவர் மீது நடவடிக்கை பாயும்’ என்று கூறியிருக்கிறார். குணா கமல் என்றும் அவரை விமர்சித்திருக்கிறார்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், கமல்ஹாசனை கைது செய்யவும் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது. கமலும் அதைதான் விரும்புவதாக தெரிகிறது.

ஜெயக்குமாருக்குதான் பதில் சொல்லியிருக்கிறார் சாருஹாசன். “கமல்ஹாசனை விட்டுவிடுங்கள். ஆனால் அவரது ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும். அம்மா வழியில் ஆட்சி நடத்துவோம் என்று சொல்வதால், நீங்களும் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது. நீங்கள் இதுவரை லஞ்சம் வாங்கியதில்லை என்று சொல்ல முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆக, சிங்கம் கோதாவில் இறங்கிவிட்டது. சிங்கத்திற்கு ஆதரவாக இன்னொரு கிழட்டு சிங்கமும் கோதாவில் இறங்கிவிட்டது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About