பானை வயிறையும் கரைக்கும் பானம்...! இந்த ஒரு பொருள் போதும்... எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?

மழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான...

மழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும். எனவே இந்த மாதிரியான நேரங்களில் வெந்தய டீ உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

தேநீர் தயாரிக்கும் முறை

    வெந்தய விதைகளை உரலில் வைத்தோ அல்லது மிக்ஸியிலயே நுனிக்கி கொள்ளுங்கள்.
    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
    அதனுடன் வெந்தய பொடியை போட்டு அதனுடன் ஹெர்பல் மூலிகை கூட சேர்த்து கொள்ளலாம்.
    மூடியை போட்டு மூடி 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
    இப்பொழுது டீயை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
    அதனுடன் தேன் சேர்த்து சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பருகலாம்.

எடை அதிகமான நபர்கள் 6 வாரம் வெந்தய டீ யை எடுத்து வந்தாலே போதும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.

நீரிழிவு நோய்

வெந்தயத்தில் இருக்கக் கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இது கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை மெதுவாக்குகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய டீ உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிரம் வயதாகுவதை தடுத்தல்

வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை எதிர்த்து போரிடுகிறது. இந்த வெந்தயத்தை தயிருடன் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

முகத்தில் உள்ள பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்குகிறது. யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை புதுப்பிக்கிறது. ஒட்டுமொத்தமாக சரும ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.


மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About