கலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா? சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு!

இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சே...

இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சேர வேண்டிய பாராட்டோ, திட்டோ போய் சேர்வதில்லை. இந்த வழக்கம் இன்று நேற்றல்ல… அப்துல் கலாம் இறந்த தினத்தில் துவங்கியது.

யாரோ, ஏதோ ஒரு படத்தில் பாடியதை இளையராஜாவே பிரத்யேகமாக போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்கள். அப்புறம் முட்டி மோதி அது அவரல்ல என்பதை தெரிந்து கொள்வதற்குள் அப்துல் கலாமின் அடுத்த நினைவு நாளே வந்துவிட்டது.

அதற்கப்புறம் ஜெயலலிதா இறந்த போது இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதி வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்து பாடிய பாடல் அப்படியே அச்சு அசலாக இளையராஜா பாட்டு போலவே இருந்தது. விடுவார்களா? அம்மாவுக்காக இளையராஜா போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பந்தி வைத்துவிட்டார்கள். இப்போதும் அது இளையராஜா பாடிய பாடலாகவே உலா வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது இளையராஜா இல்லங்க. நாங்கதான் உருவாக்குனோம் என்று விளக்கம் அளித்த பின்பும் அந்த விஷயம் பரவலாக போய் சேரவில்லை.

கட்… கலைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். விடுவார்களா? யாரோ ஒருவர் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே மெட்டில் இளையராஜா குரலில் பாடுகிறார். அவ்வளவுதான்… இது இளையராஜா பாட்டு என்று புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். இசைஞானியும் கலைஞரும் நண்பர்கள் என்பதால், இது உண்மைதான் என்று எண்ணிய கூட்டம் புயல் வேகத்தில் அந்த பாடலை ஷேர் செய்து வருகிறது.

சிம்பிள் லாஜிக். அந்த பாடலை கூர்ந்து கேட்டால் தெரியும். அது இளையராஜா குரல் இல்லை என்று. அதுமட்டுமல்ல… கடல் போல இசையறிவு கொண்ட இளையராஜா தன் மனசுக்கு பிடித்த கலைஞர் கருணாநிதிக்கு பாடல் அமைக்கிறார் என்றால் ஏற்கனவே தானே போட்ட தன் மெட்டையா காப்பியடிப்பார்? இந்த அடிப்படை கூட தெரியாமல் பரப்பிவிடும் இவர்களை எந்த லிஸ்ட்டில் வைக்க?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About