ஜெயலலிதாவாக நடிக்கும் வித்யாபாலன்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியை வழிநடத்தி 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். மிக நீண்ட திரைப்பயணமும் அரசியல் பயணத்தையும் கண்ட ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. இப்படத்தை விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா தயாரிக்கிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகை தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About