அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
நாளை வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை!
September 06, 2018
சதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வரும் வெள்ளியன்று (7ம் தேதி) நடிகை சதாவின் டார்ச்லைட் படம் உள்பட 6 படங்கள் வெளியாகிறது. அந்த படங்களைப் பற்றி இங்கு காணலாம்.
டார்ச்லைட்
தமிழன் புகழ் இயக்குனர் அப்துல் மஜித் இயக்கத்தில் சதா, ரித்விகா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டார்ச்லைட். பாலியல் தொழிலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சதா மற்றும் ரித்விகா இருவரும் பாலியல் தொழிலாளியாகவே நடித்துள்ளனர். 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்களையும், அவர்கள் சந்திக்கும் அவமானங்களையும் தான் இப்படம் சித்தரிக்கிறது.
வஞ்சகர் உலகம்
இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தெலுங்கு நடிகை அனிஷா அம்ரோஸ், சிபி புவனா சந்திரன், ஹரீஷ் பேரடி (மெர்சல் புகழ்), ஜான் விஜய், சாந்தினி தமிழரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வஞ்சகர் உலகம். க்ரைம், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொட்ரா
அறிமுக இயக்குனர் மதுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தொட்ரா. இப்படத்தில், அக்ஷயா பிரேம்நாத், பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன், ஜெய்சந்திரா சரவணாக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வழக்கமான ஜாதி பிரச்சனைகளுடன் கூடிய காதல் கதை மற்றும் சகோதர – சகோதரி செண்டிமெண்ட் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
இயக்குனர் அழகுராஜா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஆதவா மற்றும் நடிகை அவந்திகா மோகனாஸ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் வரும் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடல் வரியில் இப்படத்தின் டைட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படித்தவுடன் கிழித்து விடவும்
இயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி, மன்னார்குடி கருணாநிதி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் படித்தவுடன் கிழித்து விடவும். இன்சூரன்ஸ் மோசடி செய்த கும்பலை ஆவிகள், மனிதர்கள் துணை கொண்டு எப்படி பழி வாங்குவது எனும் கருவோடு வந்திருக்கும் படம் தான் இது. இதனை தனது காமெடி கலந்த கதையம்சத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
அவளுக்கென்ன அழகியமுகம்
இயக்குனர் கேசவன் இயக்கத்தில் விஜய் கார்த்திக், அனுபம் பிரகாஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அவளுக்கென்ன அழகிய முகம். நான்கு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கேசவன். இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், யோகி பாபு ஆகியோர் பலரும் முன்னணி ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments