எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா யாரையும் திருமணம் செய்ய மாட்டாராம் - புதுதகவல்

                 புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இது மிகவும் பிரப...



                 புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 16 பெண்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 3 பெண்களாக குறைந்து, அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17 இந்நிகழ்ச்சியின் கடைசி ஒளிபரப்பில், ஆர்யாவின் மணமகள் யார் என்று தெரியவரும். அதற்கு இரு தினங்களே உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியைக் குறித்த தகவல்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்ட 13 பெண்கள் எலிமினேட் ஆன நிலையில், தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் தொடர்கிறார்கள். இவர்களில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில், மூவருமே திருமண ஆடைகளைத் தேர்தெடுத்து கிட்டத்தட்ட தாங்கள் தான் தேர்வாகப் போகிறோம் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர். இதன் ஹைலைட்டாக, திருமணத்திற்கு முன் நடக்கும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தேறியது. மேலும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரேம்ஜி, வரலக்ஷ்மி, பிரசன்னா, சினேகா உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

நடிகை சினேகா ஆர்யாவின் திருமணம் குறித்து கூறுகையில், இந்த மூவரில் ஆர்யா யாரை திருமணம் செய்து கொண்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றார். மேலும், இரண்டு தினங்களுக்கு முன்னால், சுவேதா மற்றும் ஸ்ரேயா வெளியிட ஒரு விடியோவில் சீதா லக்ஷ்மியை கட்டிப் பிடித்து வாழ்த்துகிறார்கள். இதிலிருந்து சீதா லஷ்மியைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆர்யா யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவருடன் இரண்டு வருடமாவது குடும்பம் நடத்த வேண்டும் என்றும், விவாகரத்து போன்ற பிரச்னை எழக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்கிறது சானல் தரப்பு. இவை எல்லாம் உண்மையா இல்லை பொய்க்குள் ஒரு பொய்யா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About