இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. வாட்டர் பாட்டிலை ஓபன் செய்து தண்ணீர் குடிக்கும் கரடி

ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி ...


ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி வருகிறது.

நம்ம ஊரில் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில் காலம். கொடுமையான வெயில் அந்நாட்டில் நிலவி வருகிறது. காட்டு தீ ஏற்படும் அளவுக்கு வெப்பம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கிறது.

இதில் மனிதர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால் விலங்குகளும் படு அவஸ்தை பட்டு வருகின்றன. அப்படித்தான் கோலா கரடிகளும் வாடி, வதங்கி வருகின்றன.

சாதுவானது

கோலா கரடியானது மற்ற கரடி போல கிடையாது. ரொம்ப சாஃப்ட்... குழந்தை போன்ற சாதுவானது. இதை பார்த்தால் யாருமே பயப்பட மாட்டார்கள், பயப்படவும் தோணாது. ஆனால் இது ஆஸ்திரேலியாவில் தான் இருக்கும். வேறு எங்கும் அவ்வளவாக காணப்படாது.

தாகத்தில் கரடி

அப்படி ஒரு கோலா கரடி ரோட்டோரம் சுற்றி வருகிறது. எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று இங்குமங்கும் தேடி வருகிறது அந்த கரடி. கரடியின் தாகத்தை காரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் கவனிக்கிறார். பிறகு வண்டியை நிறுத்திவிட்டு கரடியிடம் செல்கிறார்.

வாட்டர் பாட்டில்

ஆனால் தன்னை நோக்கிதான் பெண் வருகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த கோலோ கரடி விருட்டென மரத்து மேல ஏறி உட்கார்ந்து கொண்டது. நல்ல வேளை, உச்சிக்கு போகவில்லை. பாதி மரத்தினை பிடித்து கரடி தொங்கி கொண்டிருந்தது. அந்த பெண்ணோ கையில் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு போய் கரடியின் அருகே நிற்கிறார்.

வாய் வைத்து குடிக்கிறது

பிறகு தண்ணீரை கரடியின் வாயில் ஊற்றுகிறார். கரடியும் பாட்டிலில் இருந்த மொத்த தண்ணியையும் வாய் வைத்து குடித்து முடிக்கிறது. பிறகு திரும்பவும் மரத்தில் ஏறிக் கொள்கிறது. கரடிக்கு தண்ணி கொடுக்கும் காட்சியை ஒருவர் காரிலிருந்தே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். கரடிக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About