காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! கமல் வருகிறார்.. குறும்படம் உண்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ம...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கடந்த 2 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களிலும் வாரம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களை வாரத்தின் கடைசி 2 நாட்களில் ரிவிவ்யூ செய்தார் கமல்ஹாசன்.

கருணை மழை பொழிந்தது

அதேபோல் சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதற்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் எனக்கூறுகிறார் கமல்.

புதிய குடும்பம் பிறந்திருக்கிறது

உள்ளங்களின் உண்மை முகங்கள் உணர்வுகளின் உரிமையோ முகர்ந்துகொள்ளும் ஒரு புதிய குடும்பம் பிறந்திருக்கிறது என்றும் தனக்கே உரிய தொனியில் கூறுகிறார் கமல். மேலும் லாஸ்லியா அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

குறும்படம் மூலம் கிழிப்பார்

சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களை டிவி வழியாக பார்த்து கேட்க வேண்டிய கேள்விகளை கேட்பார் கமல். ஹவுஸ் மேட்ஸின் தவறுகளை சுட்டிக்காட்டுவார். தங்களின் நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்பார். மேலும் பொய் சொல்பவர்களின் முகத்திரையை குறும்படம் மூலம் கிழிப்பார்.

ஏகப்பட்ட கன்டென்ட்டுகள்

இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படத்திற்கான ஏகப்பட்ட கன்டென்ட்டுகள் கிடைத்துள்ளன. மீரா குறித்து சாக்ஷி, அபிராமி, ஆகியோர் ஹவுஸ்மேட்ஸிடம் பேசியது, வனிதா மீரா குறித்து பில்டப் பண்ணி சொன்னது, அபிராமியை, மீராவிடம் சண்டைபோட அழைத்துவந்தது என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உள்ளன.

குறும்படம் உண்டா?

இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் குறும்படம் போட்டு தவறு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்கள் திருந்த வாய்ப்பு கொடுப்பாரா கமல் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு விடை இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியும். காத்திருப்போம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About