ஆடை - திரைவிமர்சனம்

அமலா பாலா ஆடையே இல்லாமல் நடித்துள்ளார் என பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆடை. பல பிரச்சனைகள் தாண்டி இன்று மாலை திரைக்கு வந்திருக்கிறது. பட...

அமலா பாலா ஆடையே இல்லாமல் நடித்துள்ளார் என பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆடை. பல பிரச்சனைகள் தாண்டி இன்று மாலை திரைக்கு வந்திருக்கிறது. படம் எப்படி வாங்க பாப்போம்.

கதை:

மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற பெண் நடத்திய போராட்டம் பற்றிய கார்ட்டூன் கதையுடன் ஆரம்பமாகிறது படம்.

காமினி (அமலா பால்) ஒரு பிரபல டிவி சேனலில் வேலை செய்பவர். செய்ய முடியுமா என யாராவது வாய் தவறி கேட்டால் அவர்களிடம் பெட் கட்டி எதையும் செய்து காட்டுபவர். அவரது டீமில் ரம்யா மற்றும் சில ஆண்களும் உள்ளனர்.

அப்பா இல்லாமல் உன்னை வளர்ந்த எனக்கு கெட்ட பெயர் வாங்கி கெடுத்துவிடாதே என தொடர்ந்து அவருக்கு அட்வைஸ் செய்யும் ஒரு அம்மா. ஆனாலும் அவர் கேட்பதாயில்லை.

டிவி டிஆர்பிகாக பிரான்க் ஷோ என்கிற பெயரில் பொதுமக்களிடம் பல விஷயங்கள் செய்கின்றனர் காமினி அண்ட் டீம்.

ஒருநாள் அவரகளது டிவி சேனல் இருக்கும் பில்டிங் காலி செய்யப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. அன்று அமலா பாலின் பிறந்தநாள் என்பதால் அவர்கள் டீம் அந்த காலி பில்டிங்கில் குடித்து பார்ட்டி கொண்டாட முடிவு செய்கின்றனர்.

அப்போது அமலா பால் போதையில் தான் ஆடை இல்லாமல் ஒரு நாள் இரவு முழுவதும் இந்த பில்டிங்கில் இருப்பேன் என சவால் விடுகிறார். காலையில் விழித்து பார்க்கும்போது அவர் ஆடையில்லாமல் இருக்கிறார். அந்த பில்டிங் முழுவதும், அவரது உடலை மறைக்க ஒரு துண்டு பேப்பரை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலைமையில் இருந்து எப்படி மீண்டார், அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார்? காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது படத்தின் கிளைமாக்ஸ்.

படத்தை பற்றிய அலசல்:

அமலா பால் - நடிப்பில் தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். மொத்த படத்தையும் தாங்கி நிற்பது அவரது நடிப்புதான். தன் மானத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பதற்றத்தை தேர்ந்த நடிப்பால் படம் பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்ள வைக்கிறார் அமலா பால். மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிதாக படத்தில் டைம் கொடுக்கவில்லை இயக்குனர் ரத்ன குமார்.

ஒரு பெண் ஆடையே இல்லாமல் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்கிற ஒன் லைனை எடுத்து கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். இன்டெர்வெல்லுக்கு பிறகு தான் அந்த சஸ்பென்சாண கட்டத்திற்கே வருகிறது படம்.

பெமினிசம்னா என்ன? என கேள்வி கேட்டு, அது சுய கட்டுப்பாடு இல்லாமல் இஷ்டத்திற்கு வாழ்வது அல்ல என்கிற கருத்தை படத்தின் மூலம் பதிவு செய்த இயக்குனருக்கு ஹாட்ஸ் ஆஃப்.

க்ளாப்ஸ்:

- அமலா பால் நடிப்பு

- ஒளிப்பதிவு. ஆடையில்லாத அமலா பாலை காட்ட அதிகம் மெனகெட்டுள்ளது திரையில் தெரிகிறது.

- நிர்வாணமாக இருக்கும் பெண்ணை துளி கூட ஆபாசம் இல்லாமல் காட்டியுள்ளது.

பல்ப்ஸ்:

படத்தில் தற்போது இருக்கும் அரசியல் சர்ச்சைகள், நீட் தேர்வு, மீடு போன்ற விஷயங்களை படத்தில் வைத்த இயக்குனரை பாராட்டலாம் என்றாலும், அது ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களை சலிப்படையவைக்கிறது.

டீ கடை நடத்திய மோடி, ஆதார் கார்டு என பல விஷயங்களை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் உள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் யோசிக்கவைத்தாலும், சில இடங்களில் ரசிகர்களை கைதட்ட வைத்தாலும், படத்திற்கும் அதற்கும் என்ன சார் சம்பந்தம் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

மொத்தத்தில், சில குறைகள் தாண்டி, அமலா பாலின் தைரியமான முயற்சிக்காக ஒரு முறை பார்க்கலாம். இது ஏ படம் தான், ஆனால் ஆபாசம் இல்லை. நம்பி போகலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About