ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!
October 30, 2016நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது. வேட்டி சட்டையில் கம்பி மத்தாப்புடன் ஆஸம் சூப்...
சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்
October 29, 2016இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக...
கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத் துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன் பயந்த சுபாவம் உடையவன்.
கொடியைப் போலவே சிறு வயதி லிருந்தே அரசியலில் இருக்கிறார் ருத்ரா (த்ரிஷா). இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும் காதலிக்கிறார் கள். தம்பி அன்பு, முட்டை வியாபாரம் செய்யும் மாலதியைக் (அனுபமா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், சட்ட மன்ற இடைத்தேர்தலில் கொடியும், ருத்ராவும் எதிரெதிர் அணிகளில் நிற்கவேண்டிய சூழல் உருவாகிறது. இதற்கிடையில் ஊரில் மூடப்பட்ட தொழிற்சாலை குறித்த சர்ச்சையும் பெரிதாகிறது. அரசியல் வெற்றியா, காதலா என்று வரும்போது யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்த அரசியல் விளையாட்டில் எதிர்பாராமல் நுழையும் அன்பு என்னவாகிறான் என்பதுதான் ‘கொடி’.
இயக்குநர், கொடி கதாபாத்திரத் துக்குக் கொடுத்திருக்கும் தெளிவான பின்னணியை மற்ற கதாபாத்திரங் களுக்குக் கொடுக்கத் தவறியிருக் கிறார். குறிப்பாக, கொடி கதாபாத்திரத் துக்கு இணையான வலிமையுடைய ருத்ராவின் கதாபாத்திரம் அந்த அள வுக்குத் தெளிவாக எழுதப்படவில்லை. ருத்ராவுக்கு அரசியல் ஆர்வம் வரு வதற்கான பின்னணி சரியாக நிறுவப் படவில்லை. ருத்ராவின் போக்கில் ஏற்படும் அதிர்ச்சிகரமான மாற்றமும் நம்பும் விதத்தில் காட்டப்படவில்லை.
இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் செய்திருக் கிறார். கொடி கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு செறிவாக உள்ளது. கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா சில இடங்களில் சமாளிக்கிறார். சில இடங்களில் தடுமாறுகிறார். அவர் அரசியல் மேடைகளில் பேசும் காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து சென்றுவிடுகின்றன. மாலதியாக அனுபமா கொஞ்சம் நேரம் வந்தா லும் துறுதுறு நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா, காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் செம்மையாகச் செய் திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயண் இசையில் ‘ஏ சுழலி’, ‘சிறுக்கி வாசம்’ பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வெங்க டேஷின் கேமராவும், பிரகாஷின் படத் தொகுப்பும் படத்தில் அந்த அளவுக்கு எடுபடவில்லை.
திரைக்கதை வழக்கமான பாணி யிலேயே நகர்கிறது. பலசாலி அண் ணன், பயந்தாங்கொள்ளி தம்பி, பழிவாங்கும் படலம் என எல்லாமே எதிர்பார்க்கும்படியே நகர்கின்றன. அரசியலில் வளர்வது, எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம்போலக் காட்டப்படுகின் றன. காமெடி இல்லாத குறைக்கு இப்படியா?! த்ரிஷா, தனுஷ் இடையே அரசியல் களத்தில் போட்டியும் தனிப் பட்ட முறையில் காதலும் இருப்பது ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிரு கிறது. கட்சிக்குள் த்ரிஷா மேற் கொள்ளும் காய் நகர்த்தல்கள் பரவாயில்லை. இடையில் வரும் ‘திடுக்கிட’ வைக்கும் திருப்பம் செயற்கையாக உள்ளது.
அரசியலில் ஓர் ஆண் நினைத்தால் நேர்மையாக, நல்லவனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி என்றால் அவள் வில்லியாகத்தான் இருக்க வேண்டுமா?
இதுபோன்ற சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்
சொல்லத்தக்க அளவு வெற்றி பெற்றிருக்கிறது - காஷ்மோரா படக் குழு
October 29, 2016பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக...
நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல். முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது தேவையற்றது.
இருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது கைத்தடிகள் ஆகியோர் காஷ்மோரா ஆடும் ஆட்டத்தில் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித் ததுபோல் அல்லாடும் காட்சிகள் சிரிப் புக்கு உத்தரவாதம்.
நகைச்சுவையைக் கதையோட்டத்தில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்கு நர். காட்சிகள், கதாபாத்திரங்களை வடி வமைத்த விதமும் பாராட்டத்தக்கவை. நயன்தாராவின் பாத்திரமும் 700 ஆண்டு களுக்கு முந்தைய காட்சிகளும் பேய் வீட் டில் மாட்டிக்கொண்டு கார்த்தி குடும்பம் படும் அவஸ்தையும் நன்றாக உள்ளன.
பேய் வீட்டுக்குள் கார்த்தி மாட்டிக்கொள் ளும் காட்சியில் காட்சியமைப்பும் கார்த்தி யின் நடிப்பும் அருமை. அதே வீட்டில் ஏற்கனெவே மாட்டிக்கொண்டிருந்த முரு கானந்தமும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஆவி, பேய் ஓட்டுவதாகச் சொல்லும் ஆசாமிகள் அதை எப்படி வணிகமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை முதல் பாதியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்கப் பேய்களின் ஆதிக்கமாக இருக்கிறது. பேய்கள் இருப்பது நிஜம் என்று (மூட நம்பிக்கையை) வலியுறுத்தி னால், பேய் ஓட்டும் (மோசடி) ஆசாமி களும் இருக்கத்தானே செய்வார்கள்?
போர்க்களக் காட்சிகளில் காட்சி யமைப்பு கவரும் அளவுக்குச் சண்டை அமைக்கப்பட்ட விதம் கவரவில்லை. தளபதி கார்த்தி போடும் சண்டைகள் மாயா ஜாலம்போல உள்ளன. நயன்தாராவின் நடனக் காட்சி சிறப்பாக உள்ளது.
கார்த்திக்கு இரண்டு வேடங்கள். மூன்று பரிமாணங்கள். கிரந்த தேசத்தின் தளபதி ராஜ்நாயக், அவனது ஆவி, பேயோட்டி காஷ்மோரா ஆகிய மூன்று தோற்றங்களும் நன்றாகவே பொருந்தி யிருக்கின்றன. மொட்டைத் தலையில் வல்லூறு உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும் தோற்றத்திலேயே அசத்து கிறார். கருந்தாடியை கர்வமாகத் தடவிக் கொண்டு, வீரத்தையும் பெண்ணாசையை யும் வெளிப்படுத்தும் நடிப்பில் ஈர்க்கிறார். காஷ்மோரா பாத்திரத்தில் வழக்கமான ‘கலகல’ கார்த்தியாகக் கவர்கிறார்.
நயன்தாராவுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் குறைவு. ஆனால் அவர் வரும் எல்லாக் காட்சிகளும் கம்பீரம் கலந்த வசீகரம். குட்டியூண்டு பாத்திரத்தில் வரும் திவ்யா தன் கடமையைச் செவ்வனே ஆற்றுகிறார். நெடுநாட்களுக்குப் பிறகு விவேக் காமெடியில் முத்திரை பதிக்கிறார்.
ஆங்கோர்வாட் கோவிலும், கிரந்த தேச அரண்மனை செட்டும், ரத்னமாலாவின் அந்தப்புர அரண்மனை செட்டும், கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டுள்ள செட்களும் காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு உதவி யிருக்கின்றன. பல காட்சிகளில் சிறப்பாக இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பேய் மரம் நடந்துவருவது போன்ற சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது.
கடந்த காலக் கதாபாத்திரங்கள் மீது நம்பகத் தன்மையை உருவாக்குவதில் கலை இயக்கம் (ராஜீவன்), ஆடைகள் வடிவமைப்பு (நிஹார் தவான், அனுவர்த் தன், பெருமாள் செல்வம்) ஆகியவற்றுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு வசனங்களுக்கும் (கோகுல், ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன்) பங்கிருக்கிறது. “ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச வேண்டும்”, ‘பிணமேடையின் மீது மணமேடை அமைத்த மயக்கத்தில் இருந்தவனே..’ போன்ற வசனங்கள் காட்சிக்கு வலிமை சேர்த்து மனதில் தங்கிவிடுகின்றன.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளரங் கக் காட்சிகளை எடுத்துக்காட்டிய விதத்தில், ஒளியமைப்பு, கேமரா நகர்வுகள் ஆகியவற்றில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைக்கிறது. கல்பனா ரவீந்தரின் குரலில் ஒலிக்கும் ‘ஓயா ஓயா’ பாடல் ரத்னமாலா கதாபாத்திரத்தின் வலியையும் சதியையும் நமக்குக் கடத்திவிடுகிறது. போர்க்களப் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.
முன்பாதியின் வேகத்துக்கு முழுசாக ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும்... நகைச்சுவை, பிரம்மாண்டம், முன்னணி நட்சத்திரங்கள் ஆகிய அம்சங்களோடு, கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்து தருவதில் சொல்லத்தக்க அளவு வெற்றி பெற்றிருக்கிறது காஷ்மோரா படக் குழு.
கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்...
October 29, 2016கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம்...
கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.
இந்த அத்தாட்சிக் கடிதம், FORM-B எனப்படும்.இந்த FORM-B தேர்தல் நடத்தும் தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும்.இந்த FORM-Bல் தொகுதியின் பெயர்,தொகுதியின் எண்,போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தையின் பெயர்,அவருடைய முகவரி ஆகியவை எழுதப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துப்போட்டு அனுப்பப்படும்.
1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.
கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார்.tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின் பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.
ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது
FORM-Bல் இன்னார் தான் கையெழுத்துப் போடுவார் என்பதை முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.அந்த அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ கூடி முடிவெடுத்து அந்தத் தகவலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.அதன் பிறகு தான் வேறு ஒருவருக்கு FORM-Bல் கையெழுத்துப் போடும் அதிகாரம் மாற்றித் தரப்படும்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு மாற்றித் தரும் சூழ்நிலை தற்போது இல்லை.
நீங்கள் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது இது தான்
October 29, 2016தமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்க...
கீர்த்தி சுரேஷ்- 23 வயது
நிக்கி கல்ராணி- 23 வயது
தமன்னா- 26 வயது
ஆண்ட்ரியா- 30 வயது
நஸ்ரியா- 21 வயது
எமி ஜாக்ஸன்- 24 வயது
ப்ரியா ஆனந்த்- 29 வயது
அமலா பால்- 28 வயது
பூனம் பஜ்வா- 27 வயது
நமீதா- 35 வயது
டாப்ஸி- 28 வயது
ஸ்ருதிஹாசன்- 30 வயது
லட்சுமி மேனன்- 20 வயது
ரெஜினா- 27 வயது
த்ரிஷா- 33 வயது
அனுஷ்கா- 34 வயது
நயன்தாரா- 31 வயது
ப்ரணிதா- 23 வயது
ராய் லட்சுமி- 27 வயது
நந்திதா- 30 வயது
கேத்ரின்- 26 வயது
சாய் பல்லவி- 24 வயது
காஜல்- 31 வயது
அசின்- 30 வயது
தன்ஷிகா- 26 வயது
நித்யா மேனன்- 28வயது
ஹன்சிகா- 24 வயது
ராதிகா ஆப்தே- 30வயது
சமந்தா- 29 வயது
தளபதியும் வாலியும்! - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
October 29, 2016தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய்...
தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய் அவர் தனது தமிழ்க் கவிதைப் பயணத்தை மேற்கொண்டார். தமிழும், ஆன்மிகமும் கலந்த கவிச்சிற்பி வாலி. அவரது பிறந்த நாள் அக்டோபர், 29. நெருப்பாய் சிவந்த மேனியும் நெற்றிக் குங்குமமும், நித்தம் முத்தமிடும் வெற்றிலைச் சிவப்பும், எளிதில் எதிராளியின் பலத்தையும் தன்னகத்தே பெற்றிடும் ஆற்றல்மிக்கவர்.
* கடல்களில் தீவுகளும், தீபகற்பங்களும் சகஜம். நதிகளில் அப்படி வாய்ப்பது அபூர்வம். ஆனால், காவிரியை தென்கரையாகவும், கொள்ளிடத்தை வடகரையாகவும் கொண்ட திருவரங்கம்தான் கவிஞர் வாலியின் சொந்த ஊர்.
* திருவரங்கம் இரண்டு ரங்கராஜன்களைத் தந்தது. அந்த இருவருமே அந்தப் பெயர்களை பெருமாளுக்கே கொடுத்துவிட்டு, வேறு பெயர்களில், பார் புகழ உயர்ந்தார்கள். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி. ஆம். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
* ரங்கராஜன், வாலி ஆன கதையை அவரது வாக்கியங்களிலேயே வாசியுங்கள். 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் அவரது நூலிலிருந்து...
'எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஓவியங்கள் வரையத் தலைப்பட்டேன். எவரைப் பார்த்தாலும்... அவரைப் போலவே படம் வரையும் ஆற்றல் என்னுள் இயல்பாக ஏற்பட்டிருந்தது. புகழ் வாய்ந்த ஓவியர்களான மணியம் சந்திரா இவர்களது படங்களை 'கல்கி' பத்திரிகையில் கண்டு நான் பித்தாகிப் போன நாட்கள் உண்டு. அதேப்போல் ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மாலி என்னும் மகத்தான ஓவியன் மேல் எனக்கு மாளா காதல்.
நான் சின்னச் சின்ன சித்திரங்கள் வரையும்போதெல்லாம், பாபு என்னும் பள்ளித்தோழன் பக்கத்திலிருந்து பரவசப்படுவான். இருப்பினும் என்றென்றும் நான் அவனை மறக்க இயலாதவாறு அவன் ஒரு காரியத்தை செய்து வைத்தான். மாலியைப் போல நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவன்தான் எனக்கு 'வாலி' என்று பெயர் சூட்டினான். அதன்பிறகு, எங்கள் ஊரில் உள்ள ஆட்டுக்குட்டிகூட என்னை வாலி என்றே அழைக்கத் தொடங்கியது.
பேசும் சினிமாவும், நானும் பிறந்தது ஒரே ஆண்டில்தான் (1932) இதனால்தானோ என்னவோ ஒருவித சகோதரத்துவத்தோடு சினிமா என்னை சுவீகரித்துக் கொண்டது. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நான் பாட்டெழுதப் புகுந்தேன். அவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது அசாத்தியம் என்று எனக்குத் தெரிந்தது. எத்தனையோ கவிஞர்கள் கோடம்பாக்கத்தில் கடைவிரித்தால், கொள்முதலுக்கே கட்டுப்படியாகாது என்று ஊர் திரும்பி விட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கினேன்.
கதைப்பித்தும், ஓவியப்பித்தும் என்னை ஆட்டிப் படைத்த இளம்பிராயத்திலேயே நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் பெயர் 'நேதாஜி' என்றும் குறிப்பிடுகின்றார்’
* கரூருக்கு அருகே உள்ள வாங்கல் என்னும் குக்கிராமம்தான் வாலி அவர்களின் தந்தையின் பூர்வீகம். வாங்கல் ஶ்ரீனிவாச அய்யங்கார் என்று அழைக்கப்பட்டார். தாயாரின் பெயர் பொன்னம்மாள்.
* பள்ளி நாட்களில் வாலியின் கவித்துணுக்கு ஒன்றை வாசித்து விட்டு, ''தமிழ்தான் உனக்கு சோறு போடும். ஆனா, அது எப்போ போடும்னு சொல்ல முடியாது எழுதுவதை நிறுத்தாதே" என்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியிடம் வாழ்த்து பெற்ற பெருமை இவருக்குண்டு.
* கொள்ளிடக்கரையில் 'கழுதை மண்டபம்' என்று ஒரு பழங்கால கட்டடம் உண்டு. தனது விடுமுறைகளில், கவிதை எழுதுவதற்கு அந்த இடத்தையே தேர்வு செய்துபோய் கவிதைகள் எழுதுவார். அப்போது எழுதப்பட்ட பாடல்கள் பின்னாளில் புகழ்பெற்றன. அவற்றில் ஒன்றுதான் ''கற்பனையென்றாலும், கற்சிலையென்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்.
* திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு, வருவதற்குமுன் திருச்சி வானொலி நிலையத்தில் 1950-களில் கவிஞர் வாலி பணியாற்றி இருக்கின்றார். ''எருமை மாட்டை தண்ணியிலே போட்டா விலை பேச முடியும். முதல்ல புறப்பட்டு மெட்ராஸ் வாருமய்யா" என்று அன்புக் கட்டளையிட்டவர் டி.எம்.எஸ்.
* தமிழின் பால் மாறாத காதலும், பல ஆயிரம் தமிழ்க் கவிதைகளும் எழுதிக் குவித்த கவிஞர் வாலி, பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் வடமொழியையே கற்றவர். கவிதையின் பாலும் தமிழின் மீதும் இருந்த பற்றுதலால் கவிஞரானார்.
* கவிஞர் வாலியை தனது ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக அலைந்து திரிந்து வாய்ப்புத் தேடித் தந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். இவரை 'கோபி' என்றே செல்லமாய் அழைப்பார். திரைப்பட பாடல் எழுத கவிஞர் வாலி எடுத்த முயற்சிகள் ஏராளம். சென்னைக்கும், ஶ்ரீரங்கத்துக்கும் அலைந்த அலைச்சல் அநேகம்.
* 1958 ல் கெம்பராஜ் அரஸ் இயக்கிய 'அழகர் மலைக்கள்ளன்' படத்தில் 'நிலவும் தாரையும் நீயம்மா. உலகம் ஒரு நாள் உனதம்மா" என்ற பாடல்தான் கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
* தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!
* ''பேராசை பிடித்த பெரியார்" என்று பெரியாரைப் பாராட்டி அவரது புகழ் பாடும் நாடகத்தையும் அரங்கேற்றி, பெரியாரிடம் பாராட்டு பெற்றவர். இந்த நாடகத்தில் நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஆதித்தனாரும் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார். இவர் தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்" என்று வாலி அவர்கள் எழுதிய பாடலை தந்தை பெரியார் பெரிதும் பாராட்டினார்.
* ''வாலி! நீ நினைக்கிற மாதிரி சினிமா பிரவேசம் அவ்வளவு சுலபமானது இல்லே..." என்று அறிவுரை கூறியவர் ஜாவர் சீத்தாராமன். பின்னாளில் அவர் கதை வசனம் எழுத, வாலி பாடல்கள் எழுத ஏ.வி.எம். தயாரித்த படம் உயர்ந்த மனிதன்.
* கண்ணதாசன் தமிழ்த்திரை இசையில் சாதனை படைத்தவர். ஆனால் அவருக்கு மிகச் சரியான இணைகோடாகத் திகழ்ந்தவர் கவிஞர் வாலி. இந்த இரண்டு தண்டவாளங்களின் மேல்தான் திரை இசை என்னும் ரெயில், பயணம் செய்தது.
* 1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய ''நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்'' என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
* சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.
* கவிஞர் வாலி முதன்முதலாக எழுதி, 'நன்றாக இல்லை' என்று நிராகரிக்கப்பட்ட பாடல்தான், பின்னாளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. அந்த பாடல்தான். படகோட்டியில் இடம் பெற்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார்' பாடல். படகோட்டி படத்தின் தலைப்பே வாலி அவர்கள் கூறியதுதான். அடிமைப் பெண்ணில் இடம் பெற்று ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலை இயற்றியவர் வாலி.
* வாலி எழுதிய அநேகப் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே எண்ணிடும் தவறான நிலை அடிக்கடி நிலவும். ''அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!'' பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல. வாலியே. இப்படி அநேகம் உண்டு.
* கவிஞர் வாலி அவர்கள், தனது நாடகமொன்றில் கதாநாயகியாக நடித்த திலகம் என்பவரை, கீழ்த்திருப்பதி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டவர். ஆச்சாரமான வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், எந்த மூடநம்பிக்கையும் இல்லாதவர். கந்தவேள் முருகனையும், அம்மனையும் தனது இஷ்டதெய்வமாக வழிபட்டார்.
* 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் நூலில் தன் வாழ்வின் சரிதத்தை எந்தவித சமரசமும் இல்லாமல், சத்ய சோதனையைப் போல், உள்ளது உள்ளபடி எழுதினார். அதில் அவர் கையாண்டுள்ள எழுத்துநடையும், சுவாரசியமான, பிரமிக்கத்தக்க சம்பவங்களும், ஒரு நாவலைப் போல் சுவையானவை.
* மெல்லிசை மன்னரையும் முக்தா சீனிவாசனையும் எப்போதும் நன்றியோடு தனது நூலில் நினைவு கூறுகின்றார். நூல் முழுவதும் அவருக்கு சிறு உதவி செய்தவர்களைக் கூட நன்றி பாராட்டி எழுதுகின்றார்.
* திரைப்படத் துறையில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என்று பல தலைமுறையைப் பார்த்தவர். அரசியலிலும், பெரியார், அண்ணா காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என்று சகலருடன் நல்லிணக்கமான உறவை வளர்த்தவர். குழந்தையைப் போல் எல்லோருடனும் இனிமையாகப் பழகியதால்தான், திரை இசையில் வியக்கவைக்கும் சாதனைகளை ஆற்ற முடிந்தது.
* கவிஞர் வாலி எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ்பெற்றவை. ஆனந்த விகடன் இதழில், தான் பழகிய ஆளுமைகள் பற்றி வாலி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெரும் புகழ்பெற்றது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது

