அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ரஜினி மட்டுமல்ல, எமியும் ரோபோவா? 2.0 ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்கள்!
October 25, 2016
எந்திரனின் வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் 2.0 படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. 7 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் படமென்பதால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என ஷங்கர் எதிர்பார்க்கிறார். 3D படம் என்பதால் நவீனரக வெளிநாட்டு கேமராக்களை பயன்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக திருக்கழுக்குன்றம் வாரச்சந்தை பகுதியில் ரஜினி, எமி ஜாக்சன், ஆக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள்
படமாக்கப்பட்டுவந்தன.
ரஜினி வரும் நாட்களில் கூட்டம் திடீரென கூடிவிடும் என்பதால், ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு ரஜினி எப்போது வருவார் என்பது சஸ்பென்சாகவே இருக்கும். ரஜினி வரும் நாட்களில் லோக்கல் காவல்துறை ஸ்டேஷன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. ஆனாலும் யாரும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். அவ்வப்போது திடீரென ரகசியமாக வரும் ரஜினி, தனது பகுதியை முடித்துக் கொடுத்து விட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கேயே தங்கியும் இரவு நேரங்களில் நடித்து கொடுத்துவிடுகிறார் ரஜினி.
ஷூட்டிங் நடக்கும் வேளையில் யாரும் மொபைலில் படம்பிடித்துவிடக்கூடாது என்பதில் பாதுகாப்பு குழு கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்க்காத குறையாக மெனக்கெடுகிறார்கள். உள்ளூர் மக்களும் தினமும் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர். திருக்கழுக்குன்றத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. ஷூட்டிங் நடக்கும் போது இடையில் யாரும் ரஜினியைப் பார்க்க முடியாது. ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் ரசிகர்கள் தன்னுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை சமூகவலையதளங்கிளில் வெளியிட்டு மகிழ்கின்றார்கள் ரசிகர்கள். படப்பிடிப்பு முடிந்த கடைசிநாளில் திருக்கழுக்குன்றம் பிரதான தெருவில் ஓப்பன் காரில் எல்லோருக்கும் கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்டு சென்றது ரஜினி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேப் வசதிகொண்ட வாகனம் ஒன்றை டேங்கர் லாரி வடிவில் வடிவமைத்து அது ரோபோ ரஜினியின் வீட்டு வாயிலில் சென்று நிற்பது போன்ற காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன. ரோபோ ரஜினி டிரைவராகவும், எமிஜாக்சன் அவர் அருகில் அமர்ந்து வருவது போல காட்சிகள் எடுக்கப்பட்டது. எமிக்கும் ரோபோ உடை என்பதால் ரோபோவாக எமி ஜாக்சன் நடிக்கிறாரா என்பது படம் வந்தபிறகே தெரியும். இந்த காட்சிகள் யாவும் ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டது.
இந்த வாரச்சந்தை பகுதியில் ஏக்கர் கணக்கில் ஆலமரங்கள் விழுதுகளுடன் அடர்ந்து கிடக்கிறன்றன. அதன் அருகிலேயே ஏரி ஒன்றும் உள்ளது. அதன் மையத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பறவைகள் சரணாலயம் ஒன்றை இங்கே வடிவமைத்திருக்கிறார்கள். அதில் பறவைகளை ஒரு பெரியவர் வளர்த்து வருவகிறார். திடீரென அந்த பறவைகள் ஒரு நாள் இறந்து விடுகின்றன. வில்லன் அக்ஷ்ய்குமார்தான் இதற்கெல்லாம் காரணம்.
சரணாலயத்தில் உள்ள பறவைகள் இறந்தும், அந்த சரணாலயத்தை வைத்திருக்கும் பெரியவர் அதே இடத்தில் இறந்து விடுகிறார். இதை பார்க்க வரும் ரஜினி துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு பறவையை கையில் எடுத்து கண்கலங்குறார். முதியவர் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து பார்க்கும் ரஜினி கொதித்தெழுகிறாராம்.
(ரஜினியின் 2.0 ஷூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸூக்கு படத்தின் மேல் க்ளிக்குக)
வில்லனின் கோட்டையாக அந்த இடம் மாறிய பிறகு, ஆக்ஷய்குமாருடன் ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியும், பறவைகள் தெறித்து பறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன., கடைசியில் வில்லனனை ரஜினி வீழ்த்தியபிறகு கழுத்துவரை வில்லன் உடலை புதைக்கிறார். வில்லனின் பெரிய அளவில் உள்ள கிளியும், ரஜினிக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி சுவாரஸ்யமாக இருக்குமாம். வில்லன் கோட்டை அருகே காற்றாலை வடிவில் கோபுரம் ஒன்றும் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோபுரம் கடைசியில் வெடித்துச் சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்படுமாம். அருகில் குடியிருப்புகள் உள்ளதால் வெடிக்கும் காட்சிகளை வேறுஇடத்தில் வைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதுபோல 6 ரோபோவின் வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. ரோபோ வாகனம் ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே அந்த வாகனத்தை வடிவமைக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்தவுடன் அங்கேயேயே ஒவ்வொரு பாகமாக கழட்டி வைத்துவிடுகிறார்கள். ஷங்கர் காட்சிகளை விளக்கியதும்,பறந்து வரும் ட்ரோன் பின்னே ஷங்கர் உள்ளிட்டோர் ஓடிவருகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் டூப் நடிகர்கள் மூலம் எடுக்கப்பட்டன.
எமி ஜாக்சனுடன் ஒரு பாடல் காட்சிகளின் சில பகுதிகளும் இங்கே படமாக்கப்பட்டன. பல்வேறு மொழிகளில் படம் வெளியாகிறது என்பதால் அந்தந்த மொழிகளுக்கேற்ப படக்காட்சிகள் திரும்பதிரும்ப எடுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இதனால்தான் படப்பிடிப்பு நாட்கள் கூடியிருக்கிறதாம்.
காலைத் தொடங்கும் ஷூட்டிங் பெரும்பாலும் இரவு 7 மணிவரை நடைபெற்று வந்தது. இப்போதைக்கு இந்தக்காட்சிகளோடு தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். திருக்கழுக்குன்றம் பகுதியில் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அந்த செட்-டை கழட்டும் பணி நடந்து வருகிறது. பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி தீம் பார்க் தற்போது மூடப்பட்டு, படப்படிப்பு தளமாக மாறியிருக்கிறது. அந்த இடத்தில் 2.0 படத்திற்கான செட் அமைக்கப்பட்டு வருகிறது. ரஜினி வந்ததும் ஈவிபி தீம் பார்க்கில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.
“ட்ரோன் பறக்க விடுவதற்கு நாங்கள் எப்போதும் அனுமதி கொடுப்பதில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் மாநாடுகளில் கூட ட்ரோன் பறக்கவிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பது தெரியாது” என காஞ்சிபுரம் காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

0 comments