இருமுகன் 92 கோடி வசூல்! கடும் குழப்பத்தில் விக்ரம்! What Next?

வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செ...

வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

இருமுகனின் இவ்ளோ பெரிய வெற்றியை விக்ரமே எதிர்பார்த்திருக்க மாட்டார். கிட்டதட்ட 92 கோடி வசூல் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம். இதற்கப்புறம் எந்தப்படம் என்பதிலும், அதை இயக்கப் போவது யார் என்பதிலும் கடும் குழப்பத்திலிருக்கிறார் விக்ரம். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்து பெரும் ஹிட்டடித்த ‘டோன்ட் ப்ரீத்’ என்ற ஆங்கிலப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் என்பதுதான் அவரது எண்ணம். இருமுகன் இயக்குனரையே இந்த படத்தையும் இயக்கச் சொல்லி விட்டாராம்.

நல்ல விஷயம். அதற்கு முன்னால் நடந்தவைதான் மிகப்பெரிய அநீதி. அந்தக் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாமெல்லாம் நாலு வருஷத்திற்கு முன்னால் பிளாஷ்பேக் அடிக்க வேண்டும்.

கலைப்புலி தாணுவின் அண்ணன் மகன் ஒருவர் படம் தயாரிக்க வந்தார். விக்ரமுக்கு நாலு கோடி சம்பளம் பிக்ஸ் பண்ணி ‘கரிகாலன்’ என்ற படத்திற்கு பூஜை போட்டார்கள். ஒருவாரம் கூட நடிக்கவில்லை. கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார் விக்ரம். சரி… விக்ரம் வருவதற்குள் அவர் இல்லாத மற்ற போர்ஷன்களை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்த படக்குழு, அப்படியே செய்ய… அதில் சில பல கோடிகள் கரைந்தன. ஆனால் கடைசியில் இந்த கதையே வேண்டாம். டைரக்டரும் வேண்டாம். வேறு டைரக்டரை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்றார் விக்ரம். அதற்குள் நாலு வருடங்கள் ஓடிவிட, தன் சம்பளத்தை திடீரென இருபது கோடியாக அறிவித்துவிட்டார் அவர். அதற்கும் சம்மதித்த படக்குழு, விக்ரம் சொன்ன டைரக்டரான திரு என்பவரை அழைத்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது.

கரிகாலன் படம் கருடா என்று பெயர் மாறியது. அதுவும் கொஞ்ச நாள்தான். அதற்குள் பிரம்மன் பட இயக்குனர் சாக்ரடீஸ் வந்தார். இவருக்கு அட்வான்ஸ் கொடுங்கள் என்று அவரை கமிட் பண்ணினார் விக்ரம். இப்போது அவரும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இவர் பண்ணிய கலாட்டாவை பார்த்த கலைப்புலி தாணு, அந்த படத்தை தானே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். விக்ரமை அழைத்துப் பேசினார்கள். அப்போது விக்ரமிடம், டோன்ட் ப்ரீத் படம் நல்லாயிருக்கு. நாம அதை முறைப்படி ரைட்ஸ் கொடுத்து வாங்கி, ரீமேக் பண்ணினால் நல்லாயிருக்குமே என்று ஐடியா கொடுத்தாராம் தாணு.

‘நல்ல ஐடியா’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்த விக்ரம், அதற்கப்புறம் பண்ணியதுதான் அநியாயத்திலும் அநியாயம். இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் சங்கரை அழைத்து, “‘டோன்ட் ப்ரீத்’ படத்தின் ரைட்ஸ் வாங்குங்க. நாமளே வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுப்போம்” என்று கூற, அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

ஆக மொத்தம் ‘கரிகாலன்’ பட தயாரிப்பாளருக்கு தொடர் நாமம் என்ற வகையிலும், தயாரிப்பாளர் தாணுவுக்கே தண்ணி காட்டுகிறார் என்ற வகையிலும், விக்ரமின் தனிப்பட்ட இருமுகம், படு டெரர்…

மேலும் பல...

1 comments

  1. aamam indha kalaipuli unmayil nariyayitre vitturuppara vikarami

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About