உலகநாயகன் கமல் அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு உலக அளவில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் செவாலியர் விருது வென்ற அவர் சபாஷ் நாயுடு படத்தை தற்போது எடுத்து வரு...

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு உலக அளவில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் செவாலியர் விருது வென்ற அவர் சபாஷ் நாயுடு படத்தை தற்போது எடுத்து வருகிறார்.

எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு ஏற்பட்ட சிறு விபத்து, நீண்ட நாட்கள் அவரை படுக்கையில் கிடப்பில் போட்டது. இதனால் வேதனை அடைந்த ரசிகர்கள் அவருக்காக கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளை செய்தனர்.

தற்போது குணமாகிவிட்ட அவரை கண்டு ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், மீண்டும் ஒரு அதிர்ச்சியை கமல் அவர்களுக்கு தந்துள்ளார்.

வரும் நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்த நாள் வருவதையொட்டி ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகளை செய்வார்கள்.

ஆனால் இப்போது அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை இப்படி இருப்பதால், என்னுடைய பிறந்தநாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன் என்று அவரது நற்பணி இயக்கத் தோழர்களுக்கு ட்விட்டரில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About